search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bandit"

    • 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
    • சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்கிஅழகன் (வயது 28). இவர் சிதம்பரத்திற்கு ஒரு சில பணிகளுக்காக வந்துவிட்டு மீண்டும் சீர்காழிக்கு செல்ல சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.

    அப்போது சக்திஅழகனின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் 3 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 3 வாலிபர்களும் ஒமக்குளம் சுரேந்தர் (22), நாஞ்சலூர் சந்துரு (23), மடப்புரம் அன்புமணி (22) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர்.
    • பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் வார சந்தையில் வாராவாரம் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வழிப்பறி செல்போன் திருட்டு போன்றவை நடைபெற்று வந்தன. நேற்று போலீசார் வாரச்சந்தையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அதிவேகமாக விரைந்து கீழ் ஒரத்தூர் வழியாக சென்றனர்.

    இதை அறிந்த போலீசார் கீழ் ஒரத்தூர் பகுதியில் உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதி ஊர் மக்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் வந்த அந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் அவர்களை பிடித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் வேப்பூர் கூட்டு ரோட்டில் வயதான பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குரவாரி கிராமம் மேல தெருவை சேர்ந்த 17 வயது கொண்ட 3 மாணவர்களை ேபாலீசார் கைது செய்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி. கொடல வாடி பகுதியைச் சேர்ந்த வர் முத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஏரி வேலைக்கு சென்றார். மீண்டும் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசாருதீன் வழப்பதிவு செய்து கூலித் தொழிலாளி வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×