திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை

திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே  கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி. கொடல வாடி பகுதியைச் சேர்ந்த வர் முத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஏரி வேலைக்கு சென்றார். மீண்டும் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசாருதீன் வழப்பதிவு செய்து கூலித் தொழிலாளி வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com