என் மலர்
மகாராஷ்டிரா
- மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சி நடந்தது.
- பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து நேற்றும், இன்றும் திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
மேலும், 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், நடிகைகள் மாதுரி தீட்சித், ஹேமமாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லீ, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியுடன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாக்கள் நிறைவு பெறுகின்றன.
- தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
- இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.
இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று குற்றச்சாட்டும் எழுந்தது.
இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது
- விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
- விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.
மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
- மும்பையை உலகளாவிய ஃபின்டெக் தலைநகராக மாற்றுவதுதான் எனது நோக்கம்.
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி இன்று மும்பையில் சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகம் துறையில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சில திட்டங்களை திறந்தும் வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
வரவிருக்கும் கட்டமைப்பு திட்டங்கள் மும்பை அருகில் உள்ள பகுதிகளின் இணைப்பை அதிகரிக்கும். உற்சாகத்துடன் சிறிய மற்றும் பெரிய முதலீட்டார்கள் 3-வது முறையாக அமைந்துள்ள அரசாங்கத்தால் வரவேற்கப்படுகிறார்கள்.
மும்பையை உலகளாவிய ஃபின்டெக் தலைநகராக மாற்றுவதுதான் எனது நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தேவை. இதை நோக்கி எங்கள் அரசாங்கம் செயல்படுகிறது. இந்தியாவில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வேலைவாய்ப்பு தொடர்பாக போலியான கதைகளைப் பரப்புபவர்களை வாயடைக்கச் செய்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.
- இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் அந்த முடிவையே எடுத்திருப்பார்.
முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளானது அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரகாரங்களில், பாராளுமன்றத்திலும் 50 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி காங்கிரஸை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதன் உச்சமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
'அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைத்தனத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.
இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார்.வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ் பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது' என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
- எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்- மத்திய அரசு
- 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் கடந்த காலத்தை பாஜக பார்க்கிறது- ராவத்
50 வருடத்திற்கு முன் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை பாஜக பார்க்கிறது. அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
எமர்ஜென்சி அறிவித்து 50 வருடங்கள் ஆகிறது. பாஜக இன்னும் கடந்த காலத்தை பார்க்கிறது. நாட்டின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி போன்ற நிலை தற்போது உள்ளது. யாரை வேண்டுமென்றாலும் பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.
நீதிமன்றங்கள் மீது நெருக்கடி உள்ளது. மத்திய அமைப்புகளை அரசு நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வருகிறார்கள். ஊழல், அராஜகம் அதிகரித்து வருகிறது. சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. அந்தக் காலத்திலும் இதே நிலைதான். இந்திராஜி மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றினார்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி அறிவித்தபோது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் சிவசேனா எமர்ஜென்சியை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ. 6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
- நவி மும்பையில் உள்ள கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு செல்கிறார்.
மாலை 5.30 மணிக்கு மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.29,400 கோடி மதிப்பிலான சாலை, ரெயில்வே, துறைமுகங்கள் ஆகிய துறைகள் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் ரூ.16,600 கோடி மதிப்பிலான தானே-போரிவலி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த இரட்டை குழாய் சுரங்கப்பாதை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கீழே செல்லும்.
திட்டத்தின் மொத்த நீளம் 11.8 கி.மீ. இது தானேவிலிருந்து போரிவலி வரையிலான பயணத்தை 12 கி.மீ குறைக்கும். பயண நேரத்தில் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகும்.
மேலும் ரூ. 6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் மொத்த நீளம் சுமார் 6.65 கிலோமீட்டர் ஆகும். இது நவி மும்பை மற்றும் புனே மும்பை விரைவுச்சாலையில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையத்துடன் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு நேரடி இணைப்பை வழங்கும்.
நவி மும்பையில் உள்ள கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். லோக்மான்ய திலக் ரெயில் நிலையத்தில் உள்ள புதிய நடைமேடைகளையும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரெயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11-ன் விரிவாக்கத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சுமார் ரூ.5600 கோடி ஒதுக்கீட்டில் முதல்-அமைச்சர் யுவ காரிய பிரசிஷன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும் திட்டமாகும்.
பிரதமர் மோடி இரவு 7 மணிக்கு மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தி சேவை (ஐ.என்.எஸ்) செயலகத்திற்கு சென்று ஐ.என்.எஸ் கோபுரங்களைத் திறந்து வைக்கிறார்.
- திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர்.
- ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி கோடி மதிப்புள்ளான ப்ரூச் அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Panthere De Cartier ப்ரூச் ஆனது 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18K தங்கத்தால் ஆனது.
இந்த ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
- திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.
- வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர். வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் வெளியாகி பொதுமக்களிடையே பேச்சு பொருளாகி உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் நட்சத்திரங்கள் நிறைந்த திருமண கொண்டாட்டத்தில் நைஜீரிய இசைக்கலைஞரும், ராப் பாடகருமான ரேமா பாடல் நிகழ்ச்சிக்கு $3 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ.25 கோடிக்கு மேல் பெறுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நைஜீரிய ராப் பாடகருமான ரேமா, 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். இவர் திருமணத்தில் 'காம் டவுன்' பாடலை மட்டுமே பாடுவார் என்று கூறப்படுகிறது. ரேமாவைத் தவிர, 'டெஸ்பாசிட்டோ' புகழ் லூயிஸ் ஃபோன்சியும் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.
- திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (வயது 29). இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை கவனித்து வருகிறார். இவருக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.
மணமகன் ஆனந்த் அம்பானி சிவப்பு, தங்க நிற செர்வானி அணிந்து தந்தை முகேஷ் அம்பானி, தாய் நீடா அம்பானி, அக்காள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல், அண்ணன் ஆகாஷ், அவரது மனைவி சோல்கா மேத்தா மற்றும் பிள்ளைகளுடன் வந்தார்.
மணமகன், மணமகள் மட்டுமின்றி விருந்தினர்களும் கண்ணை கவரும் ஆடம்பர ஆடை அணிந்து திருமணத்துக்கு வந்து இருந்தனர். இரவில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடந்தது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், அமெரிக்காவை சேர்ந்த டி.வி. பிரபலம் கிம் கர்தாஷியன், அவது சகோதரி கோலே கர்தாஷியன், ராப் பாடகி ரீமா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.
திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர். யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஆடினர்.
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தையொட்டி மும்பை பி.கே.சி. பகுதி விழா கோலம் பூண்டு உள்ளது. அந்த பகுதியே மின்னொளியில் ஜொலிக்கிறது. வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதையொட்டி பி.கே.சி. பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நேற்று திருமணம் இனிதே நடந்தது.
- திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மார்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
நான்கு மாதங்களாக நட்சத்திரங்கள் பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நேற்று திருமணம் இனிதே நடந்தது.

இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாரூக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் செனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ், பிளாக்ராக் இணை நிறுவனர் லேரி ஃபிங்க், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உட்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானியின் இந்த திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது.
- 11 இடங்களுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிர மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதனால் பலத்த போட்டி நிலவியது. கட்சி மாறி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கட்சிகளும் தெரிவித்தன.
இருந்த போதிலும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாயுதி (பாஜக, ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது. 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேயின் சிவசேனாவின் மகா விகாஸ் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெற 22.76 வாக்குகள் தேவை. பாஜக வேட்பாளர்கள் பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே ஆகியோர் தலா 26 வாக்குகளை பெற்றனர். ஜெயந்த் பாட்டில் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஷிவராஜ்ராவ் கார்ஜே 24 வாக்குகள் பெற்றார்.
பாஜக வேட்பாளர்களான பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே, சதாபாயு கோட் ஆகியோரும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் விடேகார், ஷிவராஜ் ராவ் கார்ஜே ஆகுியோரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் குருபால் துமானே, பவனா கவாலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரத்ன்யா ராஜீவ் சதேவ், மிலிந்த் நர்வேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.






