என் மலர்
மகாராஷ்டிரா
- பூஜா கேத்கர் மீது புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றுள்ளார்.
பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்து மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்த மகாராஷ்டிர அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
- சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என அமைச்சர் பதிவு.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது நமக்கு கண்ணீரே வந்துவிடும். அந்தவகையில் தான் இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
47 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவிலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. டோம்பிரீலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நீரா தோம்பரே. இவர் அந்த பகுதியில் 25 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் யோகேசை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தாயின் கடின உழைப்பை உணர்ந்து நன்றாக படித்த யோகேஷ் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தேர்வு முடிவு வந்ததும் மகிழ்ச்சி அடைந்த யோகேஷ் நேராக தனது தாயின் காய்கறி கடைக்கு சென்று தனது சாதனையை கூறினார். மேலும் தனது தாய்க்கு அழகான சேலையையும் வழங்கினார். அப்போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்த நீரா தோம்பரே மகனை கட்டி அணைத்து வாழ்த்தினார். அப்போது அவரது கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் ரவீந்திர சவாண் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இத்துடன், "மனவுறுதி மற்றும் கடின உழைப்பின் வலிமையால், யோகேஷ் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தாயின் ஆனந்தக் கண்ணீர் கோடிக்கணக்கில் மதிப்புடையது. சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது" என பதிவிட்டுள்ளார்.
குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் கடந்த 11-ந்தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.
- சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார்.
சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
ஸ்டேஷனரி தயாரிப்பில் கேம்லின் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.
- இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது.
- டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
ஒரு கும்பல் மசூதியை இடிக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது. கஜாபூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மசூதியை ஒரு கும்பல் இசைக்கும் அந்த வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஒவைசி பகிர்ந்த வீடியோவில், "மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு கும்பல் மசூதியின் மேல் ஏறி, காவிக்கொடியை நட்டு, மசூதியை இடிக்க முயன்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய எலைட் ல்லியனர் கிளப்பில் தீபிந்தர் கோயலும் இடம் பிடித்துள்ளார்.
- சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடியை எட்டியது.
மும்பை:
டெல்லி ஐ.ஐ.டி. பட்டதாரியான தீபிந்தர் கோயல், பங்கஜ் சத்தாவுடன் இணைந்து கடந்த 2008-ம் ஆண்டு புடீபே என்ற உணவக டைரக்டரியை தொடங்கினார். அதன்பின்னர் 2010-ம் ஆண்டு சொமாட்டோ நிறுவனமாக அதனை மாற்றியமைத்தார்.
இதையடுத்து 2018-19-ம் ஆண்டு அந்த நிறுவனம் 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. இதையடுத்து, சொமாட்டோ யூனிகார்ன் நிறுவனமாக மாறியது. அதே ஆண்டில் பங்கஜ் சத்தாவும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சொமாட்டோ நிறுவனப் பங்கின் விலை 4.2 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவில் சொமாட்டோ பங்கின் விலை ரூ.232-ஐ தொட்டது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்கின் விலை ரூ.222-ஆக காணப்பட்டது.
சொமாட்டோ பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடியை எட்டியது. இதையடுத்து இந்திய எலைட் ல்லியனர் கிளப்பில் தீபிந்தர் கோயலும் இடம் பிடித்துள்ளார்.
சொமாட்டோ நிறுவனத்தில் தீபிந்தர் கோயலுக்கு 36.95 கோடி பங்குகள் அல்லது 4.24 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
- சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்லி என்சிஆர் பகுதிகளில் லேசான மழை தொடரும்.
வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
ராய்காட் பகுதிக்கு ரெட் அலர்ட்டும், மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் கொல்காபூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில், தானேயில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நேற்று பெய்த கனமழைக்கு மத்தியில் அரகா, செண்டியா, இடூர் மற்றும் தொடுரு கிராமங்களில் பல பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கின. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.
டெல்லி என்சிஆர் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தில்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள்.
- இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்
கேதார்நாத்கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.
கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது.
- கமிட்டி முன் அனைத்து தகவலையும் தெரிவிப்பேன். அப்போது உண்மை வெளிப்படும்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஓராண்டு பயிற்சி காலத்திலேயே அவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டி சென்றுள்ளார்.
பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு, புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்தும் மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீடியா விசாரணை மூலம் என்னை குற்றவாளி என நிரூபிப்பது தவறு என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்துகளை கமிட்டி முன் எடுத்து வைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பூஜா கேத்கர் கூறியதாவது:-
ஒரு தகுதியான பயிற்சியாளராக இங்கு எனது வேலை கற்றுக் கொள்வதும், வேலை செய்வதும்தான். அதைத்தான் நான் செய்து வருகிறேன். அதற்கு மேல் என்னால் ஏதும் கூற முடியாது.
அரசால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி முடிவு செய்யும். மாறாக நான் அல்லது நீங்கள் (மீடியா) அல்லது பொதுமக்கள் முடிவு செய்ய முடியாது. கமிட்டியின் முடிவு பொதுமக்களுக்கும், ஆய்வுக்கும் வைக்கப்படும். விசாரணை சென்று கொண்டிருப்பதால் தற்போது அது குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு உரிமை கிடையாது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது. ஆகவே, மீடியா விசாரணையில் அனைவரது பார்வையிலும் என்னை குற்றவாளி என நிரூபிப்பது தவறு. கமிட்டி முன் அனைத்து தகவலையும் தெரிவிப்பேன். அப்போது உண்மை வெளிப்படும். குழு எடுக்கும் எந்த முடிவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு பூஜா கேதகர் தெரிவித்துள்ளார்.
- மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தன் குடும்பத்தாரை விட்டு பிரியும் போது முகேஷ் அம்பானி கண் கலங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மெதுவாக நடந்து செல்கின்றனர். அப்போது, ராதிகாவுக்கு மற்றொரு நபர் வெள்ளி விளக்கைக் கொடுக்கிறார். இதை பார்க்கும் முகேஷ் அம்பானி கண் கலங்கி எமோஷனலாக காணப்பட்டார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், நான் முகேஷ் அம்பானியை இந்த காரணத்திற்காகவே விரும்புகிறேன். அவர் உணர்ச்சிகளைக் காட்டுகிறார் மற்றும் தனது மருமகளை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்துகிறார் என்றார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி பேசும் போது, முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
- ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
க்ஷதனது திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்டுகிறது.
Audemars Piguet நிறுவனத்தின் Perpetual Calendar வகை லிமிட்டட் எடிஷன் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷாருக்கான், ரன்வீர் உள்பட சிலர் ஒரே மாதிரியான வாட்களை அணிந்து எடுத்த ரீல்ஸ் இணையத்தில் பரவி வருகிறது.
- தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
- தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.






