என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விஷயமல்ல. இந்தத் தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம்.

    இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதேபோல் நியூசிலாந்து அணி எங்களை விடவும் மிக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள்.

    தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம்.

    அதேபோல் 2வது இன்னிங்சிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியதுதான். ஆனால் ஒரு அணியாகவே நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.

    அதுதான் எங்களின் மனநிலையாக இருந்தது. ஆனால் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

    இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை.

    இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம்.

    இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

    சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம்.

    இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என தெரிவித்தார்.

    • டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் உள்ளிட்ட இமெயில்களை அனுப்பியுள்ளார்.

    பிரதமர் அலுவலகத்துக்கு போலி  மிரட்டல் விடுத்து 100 ஈமெயில் வரை அனுப்பிய இளைஞர் போலீசில் பிடிப்பட்டுளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ் என்ற நபர் பிரதமர் அலுவலகம், ரெயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்திருக்கிறார். பயங்கரவாதத்தை குறித்து எழுதிய டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் (Terrorism: A Demonic Storm) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ஜெகதீஸ் எழுதியுள்ளார்.

    இதை வெளியிடுவதற்கான முயற்சியில் மிரட்டல் விடுக்கும் ஈமெயில்களை அவர் அனுப்பத்தொடங்கியுள்ளார். முதலில் தனது புத்தகத்தை வெளியிட உதவுமாறு பிரதமர் அலுவகத்துக்கு மெயில் அனுப்பிய அவர் அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.

    • அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது
    • லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றது.

    பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று [சனிக்கிழமை] பின்னேரத்தில் அடையாளம் காணப்படாத தொலைப்பேசி எண்கள் மூலம் மும்பை காவல் கட்டுப்பாடு அறைக்கு இந்த மிரட்டலானது வந்துள்ளது.

    அதில், சமீபத்தில் மும்பையில் வைத்து அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல் 10 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் யோகி அதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறியும் பணியில் மும்பை போலீஸ் இறங்கிய நிலையில் மெசேஜ் அனுப்பிய தானேவை சேர்ந்த  24  வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் - இன் கும்பல் பாபா சித்திக்கை அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்தின் முன் வைத்து கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
    • சுப்மன் கில், ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் அடித்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 90 ரன்னும், ரிஷப் பண்ட் 60 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். வில் யங் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    • மும்பாதேவி தொகுதியில் ஷைனா என்.சி போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.
    • ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் என உத்தவ் கட்சி எம்.பி. கருத்து தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெண் தலைவர் ஷைனா என்.சி. இவர் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் இணைந்தார். உடனே அவருக்கு மும்பாதேவி தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.

    இதற்கிடையே, உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த், ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் (imported maal). மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிப்பகுதியில் இருந்து வந்தவர் என விமர்சித்திருந்தார். இதற்கு மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், உத்தவ் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தனது பேச்சுக்காக இன்று மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இருந்தும் ஒரு பெண்ணை அவமதித்து விட்டேன். என் வாழ்நாளில் இப்படிச் செய்ததில்லை. நான் ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனினும், நான் அந்த அர்த்தத்தில் பேசியதாக பலரும் என்னை குறிவைக்கிறார்கள். எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • நீரஜ் யாதவ் என்ற 16 வயது சிறுவன் சைக்கிள் சாகசம் செய்து வந்தான்.
    • விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் சைக்கிள் சாகசம் செய்தபோது சாலையோர சுவரின் மீது மோதி 16 வயது சிறுவன் நீரஜ் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    நீரஜ் யாதவ் சைக்கிளில் சரிவான சாலையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவரது உயிர் பிரிந்துள்ளது.

    • ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாதவர்.
    • இறக்குமதி பொருள் என அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்திருந்தார்.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெண் தலைவர் ஷைனா என்.சி.. இவர் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா காட்சியில் இணைந்தார். உடனே அவருக்கு மும்பாதேவி தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த், ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் ((imported maal)- மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்) என விமர்சித்திருந்தார்.

    இதற்கு மகாயுதி கூட்டணியில் இருந்து கடுயைமான எதிர்ப்பு கிளம்பியது. இறக்குமதி பொருள் என இழிவுப்படுத்தியதாக கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத், அவ்வாறு பேசிய இழிவுப்படுத்தியது ஆகாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "அங்கே இழிப்புப்படுத்துவது என்பது இல்லை. அரவிந்த் சாவந்த் எங்களுடைய சீனியர் எம்.பி.. ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு வெளியில் இருந்து வந்தவர் என்பதை, அவர் ஒரு இறக்குமதி பொருள் எனக் கூறினார். அவ்வளவுதான். அவள் இறக்குமதி பொருள் என்றார். அது எப்படி இழிவுப்படுத்தியது ஆகும்?. சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பற்றி நீங்கள் என்ன பேசுனீர்கள். ஒருமுறை நீங்கள் வரலாறை ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும்.

    தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர் வெளியில் இருந்து வந்து போட்டியிட்டால், மக்கள் அவர்களை வெளியில் இருந்து வந்தவர் என்றுதான் சொல்வார்கள். இதை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாக்க தேவையில்லை" என்றார்.

    • பாஜக தலைவர் ஷைனா என்.சி.அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
    • போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.

    கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மும்பாதேவி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "இந்த தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி. பா.ஜ.க. வில் இருந்த போது அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். இவரை போன்ற இறக்குமதி பொருளை ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கட்சி வேட்பாளராகிவிட்டார்" என ஆபாசமாக விமர்சித்தார்.

    இது குறித்து நக்பாடா போலீஸ் நிலையத்தில் ஷைனா என்.சி., புகார் அளித்தார். போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. உத்தவ் தாக்கரேவின் தந்தை பாலாசாகேப் உயிருடன் இருக்கும்போது அரவிந்த் சாவந்த் இவ்வாறு பேசியிருந்தால் அவரின் வாயை பாலாசாகேப் உடைத்திருப்பார். பெண்களை மதிக்கத்தவர்களுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோகித் சர்மா 18 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்களைக் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் இந்திய அணி திணறி வருகிறது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்திய அணியின் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த வில் யங், டேரில் மிட்செல் ஜோடி 87 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • நியூசிலாந்து தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மாவின் 311 விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார். டாப் 5 பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் கும்ப்ளே (619), அஸ்வின் (533), கபில் தேவ் (414), ஹர்பஜன் (417) என முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

    • புனேவில் பிரம்மாண்ட கூட்டு பேரணி நடைபெற உள்ளது.
    • ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக இழுபறி நீடித்து வரும் நிலையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    கர்நாடகா, தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை. ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்.

    விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் தள்ளுபடி மற்றும் ரூ. 25 லட்சம் மருத்துவ காப்பீடு, காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டம்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்தனர்.

    இந்த வாக்குறுதிகள் 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இதே பார்முலாவை மகாராஷ்டிரா தேர்தலிலும் கையில் எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    வருகிற 6-ந் தேதி புனேவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டு பேரணி நடைபெற உள்ளது.

    இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட உள்ளார்.

    ×