என் மலர்
மகாராஷ்டிரா
- மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 1,436.30 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- நிஃப்டி நேற்று 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் குறைந்து இன்று வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1,436.30 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 79,943.71 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சுமார் 130 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் 80,072.99 புள்ளிகள் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,072.99 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 79,109.773 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

நேற்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 8 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 24196.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 24,196.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 23,976.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 183.90 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் பங்குகள் ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்தியா ரூபாய் மதிப்பும் குறைவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா வீழ்ச்சியடைந்து 85.73 ரூபாயக உள்ளது.
- உல்பேவை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
- இதனால் உல்பே குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.
அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.
வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.
இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.
இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.
வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்டார்.
- விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை:
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராணாவின் மேல்முறையீட்டு மனு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி பங்குகள் உயர்வு.
- இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 368.40 புள்ளிகள் உயர்வுடனும், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்வுடனும் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளுடன் நேற்று நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு சுமார் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,265.07 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. அதன்பின் மெல்லமெல்ல உயர்ந்து கொண்டே சென்றது. காலை 11.20 மணியளவில் 78,610 புள்ளிகளை தொட்டது. அதன்பின் 12 மணியளவில் 78,320 புள்ளிகளுக்கு சரிந்தது. பின்னர் ஏற்றம் கண்டு முடிவில் 368.40 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 78,507.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று குறைந்த பட்சமாக 77898.30 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 78756.49 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,644.80 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை ஏழு புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,637.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 10 மணியளவில் 23,569 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதன்பின் நிஃப்டி உயர ஆரம்பித்தது. இறுதியாக நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,742.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று நிஃப்டி அதிக பட்சமாக 23,822.80 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக நிஃப்டி 23,562.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
உயர்வை சந்தித்த பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மசெயுட்டிகள், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கேடக் மஹிந்திரா பேங்க், மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் பேங்க், டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
சரிவை சந்தித்த பங்குகள்
இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியுள்ளது.
- இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
கடற்கரையில் மணலில் சிக்கிய ஃபெராரி காரை கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியுள்ளது. காரை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் பலன் அளிக்கவில்லை.
இதனையடுத்து ஃபெராரி காரின் முன்பக்கத்தில் கயிறு கட்டி ஒரு மாட்டு வண்டி மூலம் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆண்டின் இறுதி நாளான இன்று (டிசம்பர் 31-ந்தேதி) இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 78,248.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 262.56 புள்ளிகள் குறைந்து 77,982.57 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று குறைந்தப் பட்சமாக சென்செக்ஸ் 77,560.79 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,305.34 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் நிஃப்டி மிகப்பெரிய அளவில் உயர்வு மற்றும் சரிவு இல்லாமல் பாயிண்ட் 10 (.10) புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது.

இந்திய பங்குச் சந்தை நேற்று நிஃப்டி 23,644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,560.60 புள்ளிகளில் வர்த்தம் தொட்ங்கியது. குறைந்த பட்சமாக நிஃப்டி 23,460.45 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக நிஃப்டி 23,689.85 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக -.10 புள்ளிகள் குறைந்து 23,644.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மாசெயுட்டிகள், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டன.
டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டைடன் பங்குகள் சரிவை சந்தித்தன.
- புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
- பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை சேர்த்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
இதனை அடுத்து, பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அக்ஷய் ஜெயின், "நாங்கள் பப்கள் மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், இளைஞர்களை கவரும் இத்தகைய மார்க்கெட்டிங் உத்தி புனே நகரத்தின் மரபுகளுக்கு எதிரானது. பப் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த நிதேஷ் ரானே மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
- பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போல தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகாயுதி கூட்டணி அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த நிதேஷ் ரானே மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிதேஷ் ரானே, "கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் டார்கெட் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போல தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால் தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால் தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்பிஐ, ஐ.டி.சி. பங்குகள் சரிவை சந்தித்தன.
- இந்துஸ்தான் யுனிலிவர், ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், டெக் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 78637.58 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 78,699.07 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 79,092.70 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 78,077.136 புள்ளிகளில் வர்த்தகமானது.
இறுதியாக சென்செக்ஸ் 450.94 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 78,248.13 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 168.50 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை நிஃப்டி 23,813.40 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 23,796.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
இன்று அதிகபட்சமாக நிஃப்டி 23915.35 புள்ளிகளிலும், குறந்தபட்சமாக 23599.30 புள்ளிகளிலும் வர்த்தகமாகி இறுதியில் 168.50 புள்ளிகள் குறைந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்பிஐ, ஐ.டி.சி., எல் அண்டு டி போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்துஸ்தான் யுனிலிவர், ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ், சன் பார்மாசெயுட்டிகள், சொமேட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், டெக் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- சந்தையில் அறிமுகமாகி உள்ள ஐஸ்கிரீம் பிரியாணி உணவு பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.
- வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் விமர்சன கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.
உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பிரியாணி. மட்டன், சிக்கன், இறால், மீன், வெஜிடபிள், என எவ்விதமான பிரியாணி வகைகளாக இருந்தாலும் அதனை உணவு பிரியர்கள் ருசித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள். ஆனால் சந்தையில் அறிமுகமாகி உள்ள ஐஸ்கிரீம் பிரியாணி உணவு பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.
மும்பையை சேர்ந்தவர் ஹீனா. சமையற்கலை நிபுணரான இவர் சொந்தமாக பேக்கரி ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார். வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி தன்னுடைய உணவு குறிப்புகளை வீடியோவாக பதிவேற்றம் செய்து பிரபலமாக உள்ளார். அவர் 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிப்பு வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
2 பெரிய பிரியாணி அண்டாக்களுக்கு அருகே நின்று அதில் ஐஸ்கிரீமை கலந்து 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் விமர்சன கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா பைரேட்ஸ் அணி தோற்று 2வது இடம் பிடித்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
பிளே ஆப் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார்.
மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே[32 வயது]. இவரது மனைவி மைனா [Maina] குண்ட்லிக். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் இல்லாததால் மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மைனாவுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. 3 வது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் குண்ட்லிக் உத்தம் காலே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடந்த வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் மைனா மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.
உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார். அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் [வெள்ளிக்கிழமை] அவர் உயிரிழந்தார். மைனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவன் குண்ட்லிக் உத்தம் காலேவை கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 (கொலை வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது.






