கட்டுமானத் தளத்தில் தூங்கிய தொழிலாளர்கள்.. மணலை கொட்டிய லாரி ஓட்டுநர் - 5 பேர் பலி

அவர்கள் அங்கு இருப்பதை மணல் லாரி ஓட்டுநர் அறிவில்லைகொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார்
கட்டுமானத் தளத்தில் தூங்கிய தொழிலாளர்கள்.. மணலை கொட்டிய லாரி ஓட்டுநர் - 5 பேர் பலி
Published on

மகாராஷ்டிராவில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அங்கு இருப்பதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com