என் மலர்
மகாராஷ்டிரா
- அறுவை சிகிச்சை கத்தியை வாங்கி தனது பிறப்புறுப்பில் சொறுகியுள்ளார்.
- அவரது பிறப்புறுப்பில் இருந்து கத்தியும், கற்களும் அகற்றப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம் ம்பையில் ஆட்டோ ஓட்டுநரால் 20 வயது பெண் பாலியல் வன்கொடுமை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
போலீசாரின் கூற்றுப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மோசமான நிலையில் விகார் நகர் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் இருந்த அவரை போலீசார் மீட்டனர்.
தான் பலாத்காரம் செய்யப்பட்டதை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்று பயந்து அந்த பெண், அறுவை சிகிச்சை கத்தியை வாங்கி தனது பிறப்புறுப்பில் சொருகியுள்ளார். மேலும் கற்களையும் அதனோடு திணித்துள்ளார்.
அருகிலுள்ள ரெயில் நிலையம் வரை தட்டுத்தடுமாறி சென்ற அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியெடுத்த நிலையில் இறுதியில் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது பிறப்புறுப்பில் இருந்து கத்தியும், கற்களும் அகற்றப்பட்டன.
அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம் பெண் தனது குடும்பத்துடன் நலசோபராவில் வசிக்கிறார். ஆனால் விசாரித்தபோது தான் ஒரு அனாதை என்று அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
மேலும் பெண்ணின் தந்தை பேசுகையில், ஏற்கனேவே 2023 ஆம் ஆண்டு மும்பையின் நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகரில் தனது மகள் தொடர்பான இரண்டு வன்கொடுமை புகார்கள் உள்ளதாக போலீசிடம் கூறியுள்ளார்.
ஆனால் கடை வியாபாரியான பெண்ணின் தந்தை பெண்ணையும், அவளது தாயையும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் போலீசார் கருதுகின்றனர்.
ஆரம்பத்தில், அந்த பெண் தான் ஒரு அனாதை என்றும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வந்ததாகவும், அங்கு தனது மாமாவுடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினரிடம் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை அவருடன் மும்பை சென்றதாக அவர் கூறினார். இருப்பினும், மேலதிக விசாரணையில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பெண் தனது வீட்டில் இருந்து தப்பி வந்தது தெரியவந்தது.
அந்த பெண்ணின் கூற்றுப்படி, அவர் ரயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை சந்தித்து தனது துயரமான குடும்ப சூழ்நிலை மற்றும் தற்கொலை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
டிரைவர் அனுதாபமாக பேசி, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு பதிலாக 12 கிமீ தொலைவில் உள்ள அர்னாலா கடற்கரைக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார் .
- மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
- இதன் 50வது ஆண்டு விழா மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கொண்டாடப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது.
தவிர FIFTYக்கு 1,902, YEARSக்கு 2,831 OFக்கு 1,066, WANKHEDEக்கு 4,990, STADIUM 3,672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த மைதானத்தில் 2011-ம் ஆண்டில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை (50 ஓவர்) வென்றது குறிப்பிடத்தக்கது.
- நூற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம்.
- பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது வீர சாவர்க்கருக்கு மரியாதையாக இருக்கும்.
சிவசேனா கட்சி நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி (UBT) தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். பால் தாக்கரேயின் 99-வது பிறந்த தின விழாவில் இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்கான நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை, தகுதியற்ற சிலருக்கு வழங்கியுள்ளது. ஆனால், நாட்டில் இந்துத்துவாவின் விதைகளை உண்மையிலேயே விதைத்தவருக்கு பாரத ரத்னாவும் வழங்கப்பட வேண்டும்.
அவருக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை? விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். இது உத்தவ் தாக்கரே சிவசேனாவின் கோரிக்கை.
நூற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம். உங்களால் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது. பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது வீர சாவர்க்கருக்கு மரியாதையாக இருக்கும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்து்ளளார்.
- சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த நபர் கத்தியால் தாக்கினார்.
- சைஃப் அலி கான் மீது 6 இடங்களில் காயம் ஏற்பட்டது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த நபர், சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கழுத்துப் பகுதியை கத்தி பயங்கரமாக தாக்கியிருந்தது. முதுகெலும்பு அருகே கத்தி குத்து விழுந்தது. மொத்தம் 6 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சைஃப் அலி கான் வீடு திரும்பிய நிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷே் ரானே, கத்திக் குத்து குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நிதேஷ் ரானே கூறியதாவது:-
சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது நடனம் ஆடினார். அவர் குத்தப்பட்டாரா? அல்லது நடித்தாரா? என்று சந்தேகிக்கிறேன். மும்பையில் வங்கதேசத்தினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
அவர்கள் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவர்கள் சாலையை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். தற்போது வீட்டிற்குள் நுழைய தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை சைஃப் கானை கடத்திச் செல்ல வந்திருக்கலாம். அது நல்லது.... குப்பைகளை அகற்ற வேண்டும்.
சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது பார்த்தேன். அவர் கத்தியால் குத்தப்பட்டாரா? அல்லது நடித்தாரா? என்று சந்தேகம் அடைந்தேன். நடந்து சென்றபோது, நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
இவ்வாறு நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
மேலும் ஷாருக் கான் அல்லது சைஃப் அலி கான் போன்ற எந்தவொரு கானும் காயப்படும்போதெல்லாம் என்.சி.பி. தலைவர்கள் ஜிதேந்திர அவாத், சுப்ரியா சுலே கவலைப்படுகிறார்கள். எந்தவொரு இந்து நடிகர் பற்றியும் இவர்கள் கவலைப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?.
சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற இந்து நடிகர் சித்தரவை செய்யப்படும்போது, எதாவது சொல்வதற்கு யாரும் முன்வரவிலலை. சுப்ரியா சுலோ, அவாத் முன்வரவில்லை" என விமர்சனம் செய்தார்.
- நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் 12 பயணிகள் பலியாகினர்.
- ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி 'லக்னோ-மும்பை புஸ்பக்' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 5 மணி அளவில் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் வந்து கொண்டு இருந்தது.
பச்சோரா என்ற இடத்தை நெருங்கியபோது ரெயிலின் பெட்டி ஒன்றில் தீப்பொறி பறந்ததாக தெரிகிறது. இதனால் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக பயணிகள் இடையே வதந்தி பரவியது. ரெயிலில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். அப்போது, பயணி ஒருவர் பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் 'புஸ்பக்' ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மகேஜி மற்றும் பர்தாடே ரெயில் நிலையங்களுக்கு இடையே நின்ற ரெயிலில் இருந்து உயிர் பயத்தின் காரணமாக பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர்.
அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயணிகள், தண்வாளத்தை கடந்துவிட முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதிச் சென்றது.
விபரீதமாக நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் சிதறி நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டன. சிலர் ரெயில் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதனால் அந்த இடமே ரத்த சகதியாக மாறியது.
நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.பி. மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், காயமடைந்தவர்கள் ஜல்கான் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயில்வே அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
- இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
- வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர்.
மும்பையில் ரெயில் கூட்ட நெரிசலை பயணிகள் கச்சேரி பாடி மகிழ்ச்சியாக மாற்றினர். இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ராக் என்ற இசைக்குழு மும்பையில் 3 நாட்கள் இசைக் கச்சேரி நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள், இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
இருக்கை கிடைக்காமல், நெரிசலில் நின்று வந்த பயணிகளில் ஒருவர் இசைக் கச்சேரியில் கேட்ட பாடல்களை செல்போனில் ஒலிக்கச்செய்து பாட ஆரம்பிக்க, அசதி தெரியாமல் பயணிக்க மற்ற பயணிகளும் கூட்டு சேர்ந்து 'கோரஸ்' பாட, பயணமே புதிய கச்சேரியாக களைகட்டியது.
இதை பயணி ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர். நெரிசலான பயணத்தை நெகிழ்ச்சியாக மாற்றிய அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் விரும்பப்பட்டு, 20 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
- ரெயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்தனர்.
- ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றனர்
மகாராஷ்டிராவில் ரெயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி கோரமான விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா ரெயில் நிலையத்திற்கு அருகே இன்று மதியம் புஷ்பக் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்தனர்.
இதனால் அவரச சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தினர். நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீப்பிடித்ததாகத் தவறான செய்தி எப்படி பரவியது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹவுசிங் சொசைட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டுள்ளார்.
மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் இருந்த கார் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டிக்குள் கடந்த ஜனவரி 20 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பின் பக்கமாக இருந்த சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுதொடர்பான வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சுவரின் தரம் குறித்தும், ஓட்டுனரின் அலட்சியப்போக்கு குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- தான் சவாரி அழைத்து சென்றது சைஃப் அலி கான் என்று முதலில் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தி நடிகர் சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 16 கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்தினார்.
பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு கை மற்றும் கழுத்தில் கட்டுகளுடன் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கத்தியால் குத்தப்பட்ட பின், மருத்துவமனைக்கு செல்ல கார் ஓட்ட ஆள் இல்லாததால் தனது மகனுடன் ஆட்டோவில் சைஃப் அலி கான் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன், அவசர காலத்தில் உதவிய அந்த ஆட்டோ ஓட்டுனர் பஜன் சிங் ராணாவை அழைத்து சைஃப் அலி கான் கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

தான் சவாரி அழைத்து சென்றது சைஃப் அலி கான் என்று முதலில் தனக்கு தெரியாது என்றும், பிறகே அதை தெரிந்துகொண்டதாகவும் ஆட்டோ டிரைவர் பஜன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஆட்டோ கட்டணமாக சைஃப் அலி கான் 11500 ரூபாயை வழங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சைஃப் அலி கானை தாக்கிய நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தானேவில் வைத்து போலீஸ் கைது செய்தது. முகமது என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
- சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் 70 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டார்.
- கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார்.
மும்பை:
மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்தினார்.
பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு கை மற்றும் கழுத்தில் கட்டுகளுடன் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் 70 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டார். அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும், வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சட்ட விரோதமாக பல்வேறு பெயர்களில் தங்கி இருந்த அவரை மும்பை அருகே உள்ள தானேவில் போலீசார் கைது செய்தனர்.
5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நடிகர் சைஃப் அலி கான் குடியிருக்கும் கட்டிடத்தில் இருந்த பாதுகாவலர்கள் இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஷரிபுல் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். சத்தம் வராமல் இருக்க தனது காலணிகளை கழற்றி பையில் வைத்துள்ளார். தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். கட்டிடத்தின் நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளை முயற்சியில் அவர் நுழைந்துள்ளார்.
வீட்டில் இருந்த பணியாளர்கள் அவரை பார்த்து சத்தம் போட்டனர். இதைக் கேட்டு அங்கு வந்த சைஃப் அலி கான் கொள்ளையனை தடுக்க முயன்றார். அப்போது சைஃப் அலி கானை அவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பைக்கு வந்துள்ளார். தன் பெயரிலேயே ஆதார் அட்டை பெற பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தொழிலாளர் ஒப்பந்ததாரரான அமித் பாண்டே என்பவரின் உதவியோடு ஷரிபுல் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஷரிபுல் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாயார் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் அவர் திருடுவதற்காக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். ஒரு பணக்கார வீட்டில் கொள்ளையடித்து விட்டு வங்காள தேசம் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார்.
சைஃப் அலி கான் வீடு என்று தெரியாமல்தான் அவர் அங்கு நுழைந்துள்ளார். கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தானேயில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு ஒர்லியில் இருக்கும் உணவகத்தில் மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளத்திற்கு பணிபுரிந்தார். அதில் ரூ.12 ஆயிரத்தை தாயின் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவர் திருடியதால் வேலையை இழந்தார். தானேயில் ஒரு வீட்டு பராமரிப்பு வேலையில் சேர்ந்தார். கடந்த மாதம் 15-ந் தேதி அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததால் அந்த வேலையும் இல்லை. அவர் கிட்டதட்ட கையில் பணம் இல்லாமல் இருந்தார்.
இவ்வாறு ஷரிபுல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
- வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற முயன்றார்
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது பெயரை விஜய் தாஸ் என்று அவர் மாற்றி கூறியுள்ளார்.
ஆனால் அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக அவர் சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்ததாகவும், தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, முகமது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாந்த்ராவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு குற்றவாளிகள் அமரும் பின்னறையில் முகமது அமர வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்காக வாதாட முன்வருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற முயன்றார். அதே சமயத்தில் அங்கு வந்த மற்றொரு வழக்கறிஞர், தான் முகமதுக்காக வாதிடுகிறேன் என கூறி அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற்றுவிட்டார்.
இதனால் இரு வழக்கறிஞர்களுடனும் இடையில் யார் முகமதுக்காக வாதாடுவது என்பதில் சண்டை மூண்டது. இதன் தொடர்ச்சியாக இருவரையும் முகமதுக்காக வாதாட அனுமதித்து மாஜிஸ்திரேட் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்.
இதற்கு மத்தியில், நீதிமன்றம் முகமதுவை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. வக்காலத்து பத்திரம் என்பது குற்றம்சாட்டப்பட்டவருக்காக வாதாடும் அதிகாரத்தை வழக்கறிஞருக்கு கொடுக்கும் சட்டபூர்வ ஆவணம் ஆகும்.
- பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
- நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 27 வயதான சுற்றுலாப் பயணி ஷிவானி டேபிள் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டு, வடக்கு கோவாவில் உள்ள பாராகிளைடிங் நிறுவனத்தை தொடர்புக் கொண்டார்.
அதன்மூலம், நேற்று மாலை ஷிவானி டேபிள் என்பவர் பயிற்சியாளர் சுமல் (26) என்பவருடன் பாராகிளைடரில் பறந்தார். ஆனால், அவர்கள் பறந்த சிறிது நேரத்திலேயே கேரி என்கிற கிராமம் அருகே கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், " பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அந்நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய் சன்ஹிதாவின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






