என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு உண்டான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை.
    • 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு உண்டான வேலைகள் கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. .

    இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வெளியே வாக்-இன் நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாசலில் வரிசையாக காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    100 காலி பணியிடங்களுக்காக கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
    • ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின் பேரில் ஜனவரி 19 அன்று, தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

     

    ஆனால் அவரது கை ரேகை, சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பெறப்பட்ட 19 கைரேகை மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் ஊடங்களில் வெளியான இந்த தகவலை மும்பை போலீஸ் மறுத்துள்ளது. கைரேகை ஒத்துபோகின்றனவனா என்பது குறித்த அறிக்கை இன்னும் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட ஷரிபுல் உடைய காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

    ஷரிபுல் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பதை இன்னும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

     

    மேலும் ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என்று ஆகாஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.
    • நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து பிளாஸ்பூர் சென்றுகொண்டிருந்த போது போலீஸ் கைதி செய்துள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின்பேரில் முகமது ஷரிபுல் என்ற வங்கதேச நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிசிடிவி காட்சிகளில் உள்ள நபரின் முக தோற்றத்தை ஒத்திருத்த சிலரை சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் சிலரை கைது செய்து விசாரித்தனர்.

    அந்த வகையில் மும்பையில் மேற்கு மண்டல ரெயில்வேதுறையின்கீழ் இயங்கும் சுற்றுலா நிறுவனத்தில் ஓட்டுநரான பணிபுரிந்த ஆகாஷ் கனோஜியா[31 வயது] என்ற நபர் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சில மணி நேர விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த ஒரு கைது ஆகாஷ் கனோஜியா வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது.

    மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என்று ஆகாஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.

    டிவியில் எனது புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தைச் சந்தித்துள்ளது. எனக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து பிளாஸ்பூர் சென்றுகொண்டிருந்த போதுதான் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.

    சிசிடிவியில் உள்ள நபருக்கு மீசை இல்லை என்றும் தனக்கு மீசை உள்ளது என்றும், அதை போலீஸ் கவனிக்கத் தவறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், நான் தான் அவர்கள் சந்தேகப்படும் குற்றவாளி என்று ஊடகத்திடம் எனது புகைப்படத்தை போலீஸ் கொடுத்துள்ளது. இதை பார்த்த பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் என்று ஆகாஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

    • 100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக வாக்-இன் நேர்காணல் நடந்துள்ளது.
    • இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாசல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் வேலையின்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) வேலைக்காக இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலைக்காக ஐடி நிறுவன வாசலைக் கடந்து சாலை வரை வரிசையில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட ஒரு ஐடி நிறுவனத்திற்கு வெளியே 3,000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாக்-இன் நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக நிறுவனம், வாக் -இன் நேர்காணலுக்கு அழைப்பு விதித்திருந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் அங்கு படையெடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.

    • 13 மாடி கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது.
    • இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 13 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தானேவில் உள்ள 13 மாடி கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர். உடனே கீழே இருந்த பாவேஷ் மத்ரே என்ற நபர் ஓடிச்சென்று குழந்தையை பிடிக்க முயன்றார். அவரது கையில் பட்டு பின்னர் குழந்தை தரையில் விழுந்தது. இதனால் குழந்தைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாவேஷ் மத்ரே, "நான் கிரிக்கெட் விளையாடுவதால் எனக்கு பந்தை பிடிக்கும் பழக்கம் உள்ளது, அதுதான் குழந்தை கீழே விழுந்ததைக் கண்டதும் உடனடியாக விரைந்து சென்று காப்பாற்ற உதவியது" என்று தெரிவித்தார்.

    • 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் 50 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த சில நாட்களாக 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' (ஜிபிஎஸ்) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன்' நோய் என்று அழைக்கப்படுகிறது.

    இத்ததைகய நோய்களில் கில்லியன் பேர் சிணட்ரோம் ஒன்றாகும். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கை, கால் தசைகள் வலுவிழக்கும். முதலில் மதமதப்பு போல் தொடங்கி பின்னர் தசை செயல் இழப்பு வரை செல்லக்கூடும். மேலும் உணவு, தண்ணீரை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும். பேசுவதிலும் சிரமம் உருவாகும். உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு மோசமான பாதிப்பாக பக்கவாதம் கூட ஏற்படும்.

    புனேவில் கடந்த சில நாட்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் புனேவில் மேலும் சிலருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜிபிஎஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

    அதில் 14 பேர் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் 50 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.

    இந்நிலையில் சோளாப்பூரில் ஜிபிஎஸ் நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில் புனேயில் ஜிபிஎஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

    • தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
    • 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

     

    மறுபக்கம், சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று முகமது ஷரிபுல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர். மேலும் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.

    ஆனால் கைது செய்யப்பட்டவரின் தந்தை, சிசிடிவியில் இருப்பது தனது மகன் இல்லை என்றும் அவரை தவறாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் சைஃப் அலி கான் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

    மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) வசம் இருந்த கைரேகையோடு தற்போது கைது செய்யப்பட்டவரின் கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்பட்ட நிலையில் எதனுடனும் அவரின் கை ரேகை பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதல் மாதிரிகளை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

     

    • நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
    • மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார்.

    மும்பை:

    நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பெயரில் பங்களா உள்ளது. ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகான் பெயரில் உள்ள இந்த பங்களா இருக்கும் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. அந்த நிலத்தை இதற்கு முன்பு அந்த பங்களாவை வைத்திருந்தவருக்கு மாநில அரசு குத்தகைக்குவிட்டிருந்தது. அதனை வாங்கியவர் ஷாருக்கானுக்கு விற்பனை செய்தார். 2,446 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டுடன் கூடிய நிலத்தை ஷாருக்கான் வாங்கிய பிறகு மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. அதன்படி மாநில அரசிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கியவர்கள் குறிப்பிட்ட பணம் செலுத்தி அதனை சொந்தமாக்கி கொள்ள முடியும்.

    இந்த கொள்கையை பயன்படுத்தி ஷாருக்கான் தனது வீடு இருந்த நிலத்திற்கு பணம் செலுத்தி குத்தகையில் இருந்த நிலத்தை சொந்தமாக்கி கொள்ள அரசிடம் விண்ணப்பித்தார். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து அதன் மதிப்பில் 25 சதவீதத்தை செலுத்தும்படி ஷாருக்கானிடம் கூறினர்.

    இதையடுத்து ஷாருக்கான் ரூ.27.50 கோடி செலுத்தி நிலத்தை தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயருக்கு மாற்றினார். நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.

    இதனை 2022-ம் ஆண்டு ஷாருக்கான் கண்டுபிடித்ததோடு, தான் கூடுதலாக செலுத்திய ரூ.9 கோடியை திருப்பி கொடுக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார். அதை ஏற்று மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பிறகு ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி திருப்பி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

    இந்த அரிய வகை நோயால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.

    இந்த நோய் பாதிப்பு 4 நாட்களில் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனையை தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில் 44 பேர் புனே கிராமப்புறத்திலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர்.

    இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார்.
    • விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.

    மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் கேப் சர்வீஸ்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் கேப் டிரைவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளது.

    மும்பையை சேர்ந்த அந்த இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கேப் மூலம் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் விமானம் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னை அழைத்து வந்த கேப் டிரைவரை தாக்கி உள்ளார்.

    வீட்டில் இருந்து புறப்படுவதற்கே தாமதமாகியதை ஏற்க மறுத்த இளம்பெண், விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டனர்.



    • ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
    • வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி இரங்கல் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    வெடிவிபத்தின் சத்தம் 5 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
    • கூட்டறவுத் துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன?

    மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித் ஷா மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றிருந்தார். இவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது சரத் பவார் மத்திய அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவுத்துறைக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பினார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் மிகவும் தொன்மையான காசி (வாரணாசி) அனுபவித்த முக்கியத்துவம் போன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மேற்கு மகாராஷ்டிரா மாநில அரசு கூட்டறவுத்துறையை தனித்துவமாகவும், பிரகாசமாகவும் மாற்றும்.

    நீங்கள் 10 ஆண்டுகள் விவசாய அமைச்சராக இருந்தீர்கள், கூட்டுறவுத்துறை உங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்தது. கூட்டறவுத்துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன என்பது மகாராஷ்டிரா மக்களிடம் சொல்ல வேண்டும் என நான் பவார் சாகேப் (சரத் பவார்) இடம் கேட்க விரும்புகிறேன். வரிச் சிக்கல்களைத் தீர்த்தீர்களா அல்லது மாதிரி துணைச் சட்டங்களை உருவாக்கினீர்களா?.

    விளம்பரம் மூலம் ஒரு தலைவராக மாறுவது மட்டும் போதாது... நீங்கள் களத்தில் வேலை செய்ய வேண்டும்.

    மோடி கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்தார். சர்க்கரை ஆலைகளுக்கான எத்தனால் கொள்கையை வகுத்தார். சர்க்கரை உற்பத்தியாளர்களின் வருமான வரி பிரச்சனைகளைத் தீர்த்தார் மற்றும் வரிவிதிப்புக்கான மாதிரி துணைச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.

    சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பதிய குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    ×