என் மலர்
கேரளா
- மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
- ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி குறித்து பேசப்போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
- வேட்பாளர் பற்றியே நான் உங்களிடம் பேசி விடுகிறேன்.
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு வாக்கு சேகரிக்க காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வயநாடு வந்திருந்தார். அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து பேசப்போவதில்லை என்றும், அவ்வாறு செய்து சலித்து விட்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த கூட்டத்தில் அரசியல் உரையாற்றுவது மற்றும் என் குடும்பத்தாருடன் பேசுவது என இரண்டு விருப்பங்கள் என் முன்பு இருக்கிறது. ஆனால், நான் என் குடும்பத்தாருடன் பேசுவதை போல் உங்களிடம் பேசவே விரும்புகிறேன். வேட்பாளர் பற்றியே நான் உங்களிடம் பேசி விடுகிறேன். என் சகோதரி எப்போதும் பிரசாரம் செய்யும் ஒரவராகவே இருந்து வந்துள்ளார்."
"ஒவ்வொருத்தர் மீதும் பல லட்சம் லேபிள்கள் இருப்பதை என் சகோதரி புரிந்து கொள்வார். அவர் ஒவ்வொரு நபர், ஒவ்வொன்றும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்பவர். சிலர் முடியாத விஷயங்களாக பார்ப்பர், சிலர் அதில் உள்ள பலத்தை மட்டும் பார்ப்பார். அது தான் என் சகோதரி."
"என் தந்தை (ராஜீவ் காந்தி) கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட பெண்ணை (நளினி) நேரில் சென்று சந்தித்து கட்டியணைத்துக் கொண்டவர் என் சகோதரி. அவரை சந்தித்த பிறகு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அப்போது, நளினிக்காக நான் மோசமாக உணர்கிறேன் என்று கூறினார்," என்று தெரிவித்தார்.
- தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் ரெயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணூரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதில், நர்சிங் மாணவி நடைமேடையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் ரெயில் கிளம்பியது. இதை கவனித்த மாணவி சற்றும் பதற்றப்படாமல் நடந்து சென்று ஓடும் ரெயிலில் ஏற முற்பட்டார்.
ரெயில் பெட்டி கதவின் பிடியை பிடித்து படியில் கால் வைக்க முயன்றபோது கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.
இதைக் கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அபாய சங்கிலி இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர், தண்டவாளத்தில் சிக்கியிருந்த மாணவியை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
- கடந்த மாதம் 23-ந்தேதி, பிரியங்கா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந்தேதி, தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு-ஷோ நடத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அதன்பிறகு கடந்த 28-ந் தேதி 2-வது கட்டமாக பிரியங்கா காந்தி தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2 நாட்கள் வயநாடு தொகுதிக்குட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அவர் பொதுக்கூட்டங்களில் பேசி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் 3-வது கட்டமாக அவர் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். அவருடன் ராகுல் காந்தியும் இணைந்து வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். இன்றும், நாளையும் அவர்கள் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இருவரும் பங்கேற்று பேச உள்ளனர்.
2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புவார் என்றும், பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
- தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக் காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார்.
- அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு தலைவர் திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபி மீது திருச்சூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த விதிமுறைகளை சுரேஷ் கோபி மீறி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது.
- ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவில் புனித நிகழ்வுக்காக ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது.
அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது.
இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். எனவே அதற்காக விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.
அதன்படி இந்த ஆண்டும் வருகிற 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பத்மநாப சுவாமி கோவில் ஊர்வலம் கடந்து செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை ஆண்டுதோறும் 2 முறை மூடப்படுகிறது. சிலைகள் புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரையை அடைய தற்போதைய ஓடுபாதையில் ஊர்வலம் செல்லும் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது. இதற்காக ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.
இது இந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகள் அப்படியே தொடர்வதை உறுதி செய்கிறது.
இவ்வாறு விமான நிலையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த விமான நிலையம் கட்டப்பட்டபோது, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 363 நாட்கள் மக்களுக்காகவும், 2 நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் திறந்திருக்கும் என அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார்.
அதன்படி இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறைகள் தற்போது அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்றபிறகும் கூட தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெறுகிறது.
- பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்ல ஏற்பாடு.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்தில், லட்சுமணன், ராணி, வள்ளி ஆகியோர் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
- ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே பாலக்காடு- ஷோர்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில், லட்சுமணன், ராணி, வள்ளி ஆகியோர் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஷெசரனூர் பகுதியில் ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரெயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்து துப்பரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- இந்தி திணிப்பை எதிர்த்தது திராவிட இயக்கங்கள் தான்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது.
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
* சமஸ்கிருதம் சமத்துவத்திற்கும் ஏழை, எளிய மக்களின் நலனிற்கும் எதிராக இருந்தது.
* திராவிட இயக்கம் தான் தமிழகத்தில் பகுத்தறிவை வளர்த்தது.
* முற்போக்கு அறிவியல் கருத்துகளை வளர்த்தது திராவிட இயக்கம்.
* இந்தி திணிப்பை எதிர்த்தது திராவிட இயக்கங்கள் தான்.
* தமிழகத்தை சேர்ந்த பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறினார்.
- ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கு ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வன நிலம் ஒப்படைக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
பம்பை அடிவாரத்தில் இருக்கு சபரிமலை சன்னிதானத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக 2.7 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் வனம், வருவாய், தேவசம் துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் ரோப்வே திட்டம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் அந்த பணிகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது மற்றும் வனப்பகுதியில் கட்டுமான பணிகளை எளிதாக்குவது உள்ளிட்டவைகளை நோக்கமாக கொண்டு ரோப்வே பணிகளை மாற்றி புதிய அம்சங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரோப்வே-க்கான கோபுரங்கள் கட்டுமானத்தின் போது வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அவை சபரிமலை பாதைக்கு அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது. கோபுரங்களின் உயரம் 30 முதல் 40 மீட்டரில் இருந்து, 40முதல் 60 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் கோபுரங்களின எண்ணிக்கை 7-ல் இருந்து 5-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ரோப்வே திட்டத்துக்கு வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை 300-ல் இருந்து 80 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கு ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வன நிலம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிலத்துக்கு பதிலாக கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கட்டிலப்பாரா, செந்தூரனி வன விலங்கு சரணாலயத்தில் உள்ள வருவாய் நிலம் வனத்துறைக்கு மாற்றப்படுகிறது.
அதில் 9 ஹெக்டேர் வருவாய் நிலம், காடுகளை வளர்ப்பதற்காக வனத்துறைக்கு ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டு சபரிமலை சீசன் முடிவடைவதற்குள் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட தேவசம் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கு தகுந்தாற்போல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2027-ம் ஆண்டு சபரிமலை சீசனுக்குள் ரோப்-வே இயக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த பணி தொடங்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு 10 நிமிடங்களில் விரைவாக செல்லவும், கார் மற்றும் ஆம்புலன்சு வாகனத்தை கொண்டு செல்லவும்முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார்.
- பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.
இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.
வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்த கடந்த மாதம் 23-ந்தேதியே, பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக ராகுல்காந்தியும் பிரசாரம் செய்தார். அவர்கள் இருவரும் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியும் ஆதரவு திரட்டினார்கள்.
அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் கேரளாவுக்கு நாளை(3-ந்தேதி) வருகின்றனர்.
அவர்கள் நாளை காலை 11 மணிக்கு மானந்தவாடி காந்தி பூங்கா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றனர். மாலை 3 மணிக்கு அரிக்கோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் 2-வது நாளாக நாளை மறுநாள் (4-ந்தேதி) கூட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10 மணிக்கு சுல்தான்பத்தேரி, 11 மணிக்கு புல்பள்ளி, 11.50 மணிக்கு முள்ளென்கொல்லி, மதியம் 2 மணிக்கு கல்பெட்டா, மாலை 3.50 மணிக்கு வைத்திரி ஆகிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார். ஆனால் பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் திறந்த வாகனத்தில் சென்ற படி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
- மற்ற மாநிலங்கள் இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும்போது கேட்பதற்கு முன்னதாகவே நிதி.
- கேரளாவுக்கு கேட்டும் இல்லை. மத்திய அரசின் இந்த புறக்கணிப்பு வேண்டுமென்றே மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்றிரண்டு கிராமங்கள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
அந்த கிராமங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைக்க, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் மோடியும் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வைிட்டு மத்திய அரசு போதுமான உதவிகளை செய்யும் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் உருவான 68-வது தினம் கேரளப்பிரவி (Keralappiravi) என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடைபெற்று 90 நாட்கள் ஆகியும் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மத்திய அரசு சிங்கிள் பைசா கூட ஒதுக்காதது கொரூரமான புறக்கணிப்புக்கு ஆதாரம்.
மற்ற மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, அந்த மாநிலங்கள் கேட்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அனால் கேரளா உதவி கேட்டபோதிலும் ஒதுக்கப்படுவதில்லை. எனவே, மத்திய அரசின் இந்த புறக்கணிப்பு வேண்டுமென்றே மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கேரள மாநில உயர்நீதி மன்றமும், மாநில சட்டமன்றமும், மத்திய அரசுக்கு 1202 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்திய போதிலும், மத்திய அரசு தர தயாராக இல்லை.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (எதிர்க்கட்சி) ஆகியவை மாநிலத்தில் முன்னேற்றம் மீது அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.






