என் மலர்tooltip icon

    இந்தியா

    புஷ்பா பட ரசிகரின் வினோத தோற்றம்- வீடியோ வைரல்
    X

    புஷ்பா பட ரசிகரின் வினோத தோற்றம்- வீடியோ வைரல்

    • 12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார்.
    • அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை.

    படங்களில் பிரபலமாகும் பாடல்கள், காட்சிகளைப் போல நடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள புஷ்பா-2 படத்தில், கங்கம்மா தல்லி காட்சி இடம்பெற்றிருக்கும். ஆந்திரா கோவிலில் ஆண்கள் பெண் வேடமணிந்து வழிபாடு செய்யும் திருவிழா சம்பந்தமானது அந்த காட்சி.

    கேரளாவில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அந்த புஷ்பா பட காட்சி போல வேடமணிந்து, உற்சாகமாக நடனமாடி மற்ற ரசிகர்களை கவர்ந்தார். அவர் முகத்தில் சிவப்பு வண்ணமும், உடம்பில் நீல வண்ணமும் பூசி, படத்தில் அல்லு அர்ஜூன் தோன்றும் தோற்றத்தில் இருந்தார். வயிற்றில் அல்லு அர்ஜூன் உருவத்தையும் வரைந்து இருந்தார். அவரது பெயர் தாசன் என்றும், கலை ஆர்வம் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை. அவர் கங்கம்மா தல்லி வேடம் அணிந்து, பெருத்த வயிற்றில் வரையப்பட்ட ஓவியத்தை அசைத்துக் காட்டும் காட்சி வலைத்தளங்களில் வைரலானது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல லட்சம் பேரின் பார்வைகளையும் பெற்றுள்ளது அந்த வீடியோ.



    Next Story
    ×