என் மலர்tooltip icon

    கேரளா

    • சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டியது.
    • மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    "ஃபெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரள மாநிலத்தில் "ஃபெஞ்சல்" புயல் காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று வயநாடு , கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை வருகிற 7-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பத்தினம்திட்டா மாவட்டத்திலும் பல இடங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் மழை குறைந்து தண்ணீர் வரத்தும் குறைந்ததால் பம்பை ஆற்றில் இறங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் வனப்பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பம்பை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பம்பை ஆற்றின் இருபுற கரைகளிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 

    பிரீபெய்டு டோலி சேவை அறிமுகம்

    சபரிமலையில் பிரீபெய்டு டோலி சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் சேவை மையம் அமைக்கப்படுகிறது. டோலி சேவையை பெற நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தலாம். 80 கிலோ வரை ரூ.4 ஆயிரம், 100 கிலோ வரை ரூ.5ஆயிரம், 100 கிலோவுக்கு மேல் ரூ.6ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது. பிரீபெய்டு டோலி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து டோலி தூக்கும் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 படுகாயம் அடைந்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் காரும், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள பேருந்து பிழையாயத்தில் காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது . ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி தனது கண் புருவங்களை உயர்த்துவதையும், மேக்-அப் முடிந்ததும் அழகாக சிரிக்கும் காட்சிகளும் பயனர்களிடம் பாராட்டை பெற்றது.
    • வீடியோ சுமார் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

    கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஐ-லைனர் திறன்களை வெளிப்படுத்தும் மேக்-அப் வீடியோ மூலம் இணையத்தில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், சிறுமி மேக்-அப் செய்யும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த சிறுமி தனது கண் புருவங்களை உயர்த்துவதையும், மேக்-அப் முடிந்ததும் அழகாக சிரிக்கும் காட்சிகளும் பயனர்களிடம் பாராட்டை பெற்றது.

    இந்த வீடியோ வைரலான நிலையில், டெல்லியை சேர்ந்த பிரபல பாடகி சுனிதா சவுகான் அதே போன்ற ஒரு வீடியோவை மீண்டும் உருவாக்க ஆசைப்பட்டார். அதன்படி, சிறுமி முதலில் தனது கண்ணின் ஒருபுறம் ஐ-லைனர் செய்வது போன்று பாடகியும் செய்கிறார். தொடர்ந்து சிறுமியை போலவே ஐ-லைனர் மூலம் சுனிதா சவுகான் மேக்-அப் செய்த காட்சிகளை பார்த்து பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த வீடியோவுடன் சுனிதா சவுகானின் பதிவில், அவள் ஒப்புதல் அளிப்பாள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், நடிகர் மெய்யாங் சாங், பாடகி ஜாஸ்மின் சான்டலஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். இந்த வீடியோ சுமார் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.



    • சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம்.

    திருவனந்தபுரம்:

    "பெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது.

    நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்று வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமிட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    மேலும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2-வது நாளாக மழை பெய்தது.

    கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் மலை யேறிச் சென்றார்கள். மேலும் சன்னிதானத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்றே தண்ணீர் வரத்து அதிக ரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    கேரளாவில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.மலைப்பாங்கான பகுதி களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
    • வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    • சபரிமலை கோவில் பகுதியில் கனமழை கொட்டும் நிலையில் நனைந்தபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதும் நிலையில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கேரள மாநிலம் சபரிமலை கோவில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கி.மீ. காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் சபரிமலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.

    சபரிமலை கோவில் பகுதியில் கனமழை கொட்டும் நிலையில் நனைந்தபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதும் நிலையில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆன்லைனில் 70,000 பக்தர்கள் பதிவு செய்த நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
    • அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.

    முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம் போர்டு செய்துள்ளது.

    சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இது போல வருவாயும் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.

    • தீ பிடித்த குடோனில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையம் அருகே சினிமா தயாரிப்பாளர் ராஜூ கோபிக்கு சொந்தமான குடோன் உள்ளது.

    இங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ பிடித்த குடோனில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கட்டிடத்தின் அருகில் இருந்த வீடுகள், ஆட்டோ மொபைல் பணிமனை மற்றும் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் தீ விபத்து காரணமாக தெற்கு மேம்பாலம் மற்றும் ஆலப்புழா வழியாக செல்லும் ரெயில் போக்கு வரத்து சுமார் 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டன.

    முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே அந்த வழியாக போக்குவரத்து சீரானது. தீ பிடித்த குடோனின் பின்புறம் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததாகவும் அதில் யாரோ தீ வைத்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றார்.

    தொடர்ந்து அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு வந்தார். அவருடன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல்காந்தியும் வந்திருந்தார்.

    அவர்கள் இருவரும் மலப்புரம், நிலம்பூர், வண்டூர், எடாவண்ணா, ஏர்நாடு பகுதிகளில் நடை பெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, வயநாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியை விடுவிக்காமல் பிரதமர் மோடி பாரபட்சமாக செயல்படுகிறார். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென அரசமைப்பு சட்டம் கூறுகிறது.

    ஆனால் பிரதமர் மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார் என்றார்.

    பிரியங்கா காந்தி பேசும் போது, வயநாடு மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது. உங்களது பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு தெரியும். அவற்றை தீர்த்து வைப்பது தான் எனது முதல் கடமை. பா.ஜ.க.வுக்கு அரசியல் மரியாதை எதுவும் தெரியாது.

    நாட்டில் தேர்தல் நடை முரைகள் குறித்த நம்பிக்கை போய்விட்டது. நாட்டை நிலைநிறுத்தும் அடிப்படை அம்சங்களுக்காக நாம் போராட வேண்டும் என்றார். நேற்று பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற ராகுல்காந்தி, அதன்பிறகு டெல்லி சென்றார்.

    ஆனால் பிரியங்கா செல்லவில்லை. அவர் வயநாடு தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, பல வழிகளில் இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றது என்றார். மேலும் வயநாடு மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எனது குரல் தெரிவிக்கும் என்றார்.

    • வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
    • குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் வளர்ப்பு மகளை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது வளர்ப்பு மகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தந்தை தனது வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், இறுதியாக தனது தாயிடம் இதை கூறியதை அடுத்து குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏஎம், போக்சோ, ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றவாளிக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

    முதலில் அவருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறை தண்டனையான 40 ஆண்டுகள் அவர் சிறையில் இருப்பார். அதன்பின் தொடர்ந்து மீதியுள்ள காலமும் அவர் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

    • வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் பாருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர்கள் தினமும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அதேபோல் நேற்றும் அவர்கள் சென்றனர். வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். அப்போது அவர்களது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து தங்களின் மாடுகளை தேடி 3 பேரும் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

    ஆனால் காட்டுக்குள் சென்ற 3 பேரும் மாலை 4 மணியாகியும் திரும்பி வரவில்லை. அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். மதியம் ஒரு மணியளவில் மாயாவிடம் அவரது கணவர் செல்போனில் பேசியிருக்கிறார்.

    அதன்பிறகு அவரது செல்போன் கிடைக்க வில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற 3 பெண்களும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத் தினர் பரிதவித்தனர்.

    இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காணாமல் போன 3 பெண்களை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் உடனடயாக தொடங்கினர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மாலை தொடங்கிய தேடுதல் பணி இரவிலும் நீடித்தது. ஆனால் 3 பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை விடவில்லை.அப்போது காட்டுக்குள் சிக்கிய 3 பெண்களும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

    அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுவிட்டனர். திரும்பி வர வழி தெரியாமல் தவித்த அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து மீட்டனர்.

    மீட்கப்பட்ட பெண்கள் இன்று காலை வரை வனப்பகுதியில் இருந்தனர். அவர்களை வனத்துறையினர் இன்றுகாலை விடிந்தபிறகு காட்டில் இருந்து வெளியே அழைத்தது வந்தனர். பெண்களை மீட்டு வந்த குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    வனப்பகுதியில் சிக்கிய பெண்களை இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்டு மீட்ட வனத் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    ×