என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹனி ரோஸ்"

    • பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
    • சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.

    பின்பு அவர் எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாமி செம்மனூர், சிறையில் இருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்களுடன் கேரள மாநில மத்திய பகுதி சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார் சென்றிருக்கிறார்.

    பின்பு ஜெயில் சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் அறையில் டி.ஐ.ஜி. அஜய குமார் மற்றும் அவருடன் சென்றிருந்த 3 முக்கிய பிரமுகர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாமி செம்மனூரிடம் பேசியுள்ளனர். மேலும் சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து சிறைத்துறையின் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் சிறையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ராதிகா, 34 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மோகன் லால் படத்தில் நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika
    1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். 

    மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.



    அவரது நடிப்பில் ‘தி கேம்பினோஸ்’ படம் கடந்த மார்ச்சில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இதில், இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது. 

    அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika

    நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், மலையாள பட உலகிலும் இதுபோன்ற தொல்லைகள் இருக்கிறது என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார்.
    நடிகைகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படுக்கைக்கு தன்னை அழைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையமும் அரசும் விசாரணையில் இறங்கி உள்ளன. இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பிரபல நடிகை ஹனிரோஸ் அம்பலப்படுத்தி உள்ளார்.

    இவர் தமிழில் காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒன் பை டூ என்ற மலையாள படத்தில் உதட்டோடு உதடு முத்தமிட்டு நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லை குறித்து ஹனிரோஸ் அளித்த பேட்டி வருமாறு:-



    “மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் நமது கையில்தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலையாள படத்தில் நான் நடித்த முத்த காட்சி படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருந்தது.”

    இவ்வாறு நடிகை ஹனிரோஸ் கூறினார்.
    ×