என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • காயங்களுடன் ஜெயாநகர் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை பெற்றார்.
    • குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பனசங்காரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 29 வயது இளைஞர் அக்ஷய் தலையின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது.

    இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயங்களுடன் ஜெயாநகர் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் அவர் உயிர் பிரிந்தது.

    அவர் ஒருவரே வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு மாநகராட்சி அவரின் ரூ.4 லட்சம் மருத்துவ செலவை ஏற்றத்துடன், குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளது.

    மரங்களை பராமரிக்காத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

    விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், ஒரு வேளை ஹெல்மெட் அணிந்திருந்தால் அக்ஷய் பெரிய காயங்களில் இருந்து தப்பித்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.
    • "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.

    ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

    நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.

    அப்போது, ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20F-ல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும், பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.

    இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.

    இதையடுத்து, விமானி மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

    • ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
    • கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை.

    கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆர்சிபி அணி நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அடங்கிய மசோதா கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டவர், நிகழ்ச்சியை செயல்படுத்தியவர்கள் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாக கருதப்படும் வகையில் மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.

    மழைக்கால கூட்டத் தொடரின்போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'
    • தக் லைஃப் படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது . இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்து வெளியிடவில்லை.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தில் வேலை அல்ல. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்? என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பியது.

    மேலும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து, கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடும்போது திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், தடை இல்லை என்றாலும் தக் லைஃப் படம் கர்நாடாகாவில் வெளியிட வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய விநியோகஸ்தர் ஒருவர், "நாளை 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட போதிய திரையரங்குகள் இல்லை. இன்னும் 2 வாரங்களில் ஓடிடியில் தக் லைஃப் வெளியாகிவிடும் என்பதால் கர்நாடகாவில் இப்படத்தை தற்போதைக்கு திரையிட முடியாது" என்று தெரிவித்தார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது . இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்து வெளியிடவில்லை.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தில் வேலை அல்ல. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்? என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பியது.

    மேலும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடும்போது திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

    • குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார்.
    • தொண்டையில் பீடி துண்டு சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு டவுனில் அடையாறு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. இவரது கணவர் திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு அனீஷ் குமார் என்ற 10 மாத குழந்தை இருந்தது.

    குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் அவ்வப்போது பீடியை புகைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று அவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட்டுள்ளார்.

    அதை அவரது 10 மாத குழந்தை வாயில் எடுத்து போட்டு விழுங்கியுள்ளது. இதில் தொண்டையில் பீடி துண்டு சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    உடனே தாயும், தந்தையும் குழந்தையை மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை 10.30 மணி அளவில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய், மங்களூரு புறநகர் போலீசில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், எனது கணவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட வேண்டாம் என்று கூறினேன்.

    இருப்பினும் அவர் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக பீடி துண்டை வீட்டுக்குள்ளேயே வீசி வந்தார். சம்பவத்தன்றும் அவர் அவ்வாறு புகைத்துவிட்டு வீசிய பீடி துண்டை எடுத்து எனது 10 மாத குழந்தை விழுங்கிவிட்டது. இதில் உடல் நலம் பாதித்து எனது குழந்தை உயிரிழந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை செய்த தவறால் 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சூடான இரும்புக் கம்பியால் குழந்தையின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
    • தீக்காயங்களைக் காட்டி, தனது தாய்தான் சூடு வைத்ததாகக் கூறும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், சேட்டை செய்ததற்காக தனது மகனின் கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைத்த ஒரு தாய் நேற்று கைது செய்யப்பட்டார்.

     ஹுப்பள்ளி,  திப்பு நகரில் திங்கட்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சேட்டைகள் காரணமாக ஆத்திரமடைந்த தாய் அனுஷா ஹுலிமாரா, இந்த கொடூர தண்டனையை அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சூடான இரும்புக் கம்பியால் மகனின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

    சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை நலத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான ஆதரவையும் கவனிப்பையும் வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.

     

    • கர்நாடக சட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார்.

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் வந்தார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    • கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது
    • பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.

    பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பைக் டாக்சிகளால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் வெகுவாக குறைந்தது. ஒருவர் மட்டும் பயணம் மேற்கொள்பவா்கள் பைக் டாக்சியை அதிகம் நாடினர்.

    இதற்கிடையே பைக் டாக்சி ஓட்டுனர்கள், பெண் பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரித்தன.

    அத்துடன் பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.

    இருப்பினும் கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் பயணம் செய்த பெண் பயணிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல், அந்த டாக்சி சேவையை தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கர்நாடக அரசு கடந்த ஆண்டு (2024) பைக் டாக்சிக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றது.

    இதையடுத்து கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரின. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் ஜூன் 16-ந் தேதி (நேற்று) முதல் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    அதாவது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    தேசிய மென்போருள் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்), கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை ஆகியவை பைக் டாக்சியை அனுமதிப்பது குறித்து விரைவாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு, பைக் டாக்சியை அனுமதிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தெரிகிறது.

    பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பெங்களூருவில் தடையை மீறி இயக்கப்படும் பைக் டாக்சிகளை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி, யஷ்வந்தபுரம் மற்றும் ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது பகுதிகளில் தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்

    அப்போது தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். யஷ்வந்தபுரம், ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்தார்கள்.மேலும் அந்த வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பெங்களூரு மாநகர் முழுவதும் அத்துமீறி இயங்கிய 103 பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
    • நேற்று இரவு மங்களூரு வாமஞ்சூர் அருகே உள்ள கெத்திக்கல்லில் ஒரு குன்று சரிந்து விழுந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மங்களூரு வாமஞ்சூர் அருகே உள்ள கெத்திக்கல்லில் ஒரு குன்று சரிந்து விழுந்தது.

    இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, சிவமோகா, குடகு, மற்றும் சிக்கமகளூரு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பெல்காம், கடக், ஹாவேரி, தார்வாட், சாமராஜநகர், தாவனங்கரே, ஹாசன் மற்றும் மைசூரு, பாகல்கோட், கொப்பல், மண்டியா, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 15-ந்தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.
    • இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பைக் டாக்ஸிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. மேலும் 15-ந் தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர்ராவ்-நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண்ஷெட்டி, 'கர்நாடகத்தில் 4, 3 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று வாடகை அடிப்படையில் டாக்ஸி சேவையை வழங்குகின்றன. ஆனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக மாற்றுவது என்பது சாத்தியமில்லை. இத்தகைய பைக் டாக்ஸிக்கு நாட்டில் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 'நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும். பதிவெண் பலகைகளின் நிறத்தை பசுமை நிறத்திற்கு மாற்றினால் போதுமானது' என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்துறையின் உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே நாளை மறுநாள் 16-ந்தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட உள்ளது.

    • சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
    • முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சைத்ராவுக்கு ஷிவு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பார்கள் என்று அஞ்சிய சைத்ரா, அவர்களை விஷம் வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

    உணவு மற்றும் காபியில் நச்சு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களைக் கலந்து கொடுத்ததால், குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

    கணவர் கஜேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சைத்ரா வேண்டுமென்றே உணவில் தூக்கமாத்திரை கலந்தது உறுதி செய்யப்பட்டது.

    சைத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலன் ஷிவு தலைமறைவாக உள்ளார்.

    ×