என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
- போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
லடாக்:
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
- போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லடாக்:
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை அதிகாரிகள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
- இதை எதிர்த்து பெண் ஒருவர் நேரலையில் பேசியபோது, கணவன் இடைமறித்தபோது சண்டை ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மெகராஜ் மாலிக். இவர் தோடா பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இவர் ஆவார்.
இவரை அதிகாரிகள் பொது ஒழுங்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய செயலில் ஈடுபட்டதாக கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இதனால் தோடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போன்ற தடையை தோடாவில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வின் கைதுக்கு எதிராக பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவரது கணவர், அதை கண்டு உடனடியாக லைவ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவர் நிறுத்தவில்லை. இதனால் கணவர் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இருந்தபோதிலும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அந்த பெண் தொடர்ந்து பேசியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை லைவ் நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலான நிலையில், கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை தடை உத்தரவை மீறியதற்காகவும், லைவ் நிகழ்ச்சியின்போது மனைவி தாக்கியதற்காக கணவனையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
சியாச்சின்:
லடாக் யூனியன் பிரதேசத்தின் சியாச்சின் கிரேசியர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், மீட்புக் குழுவினர் மோஹித் குமார், நீரஜ் குமார் சவுத்ரி, தாபி ராகேஷ் தேவ்பாய் ஆகிய 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
- மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.
ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
தோடா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்ட முதல் சிட்டிங் எம்எல்ஏ ஆவார். இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக தோடா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.
இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் மாலிக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
- அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
- பூஞ்சில் மாவட்டத்தில், ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
- பயங்கரவாதிகளுடன் 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு- காஷ்மீரின் எல்லை மாவட்டமான பூஞ்சில் ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது அகமதாபாத்தை சேர்ந்த தாரிக் ஷேக் மற்றும் சேம்பர் கிராமத்தை சேர்ந்த ரியாஸ் அகமது ஆகிய பயங்விரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
- தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் காயம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன, நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தோடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த கனமழைக் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தோடா- கிஷ்த்வாரை இணைக்கும் NH-244 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதற்கான வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-வின் பல்வேறு பகுதியில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்கு செல்ல இருக்கிறேன். மீட்புப்பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கியமான அறுகளான ராவி மற்றும் தாவியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
- இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது.
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது.
அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.
பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
- இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- ஒரு காலத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் கல் வீசுதல் நடந்தது. ஆனால் இப்போது அது வரலாறாகிவிட்டது.
- ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், முழு பள்ளத்தாக்கும் மூடப்பட்டிருக்கும். அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்திய வர்த்தக சம்மேள உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா போன்ற மாவட்டங்களில் முதலீடுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரை விட புல்வாமாவில் அதிகமான தொழில்துறை யுனிட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பயங்கிரவாதிகள் மற்றும் அவர்களுடைய சூழ்நிலைகள் குறித்த பயம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
Har Ghar Tiranga பிரசாரத்தின்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் கொடியுடன் வந்தனர், உலகமே அதைப் பார்த்தது. ஷோபியன் மற்றும் புல்வாமாவில் உள்ள பல கிராமங்களில் காவல்துறையினரோ அல்லது அரசு அதிகாரிகளோ செல்வதில்லை. இப்போது, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கின்றனர்.
உள்ளூர் பயங்கரவாத ஆட்சேர்ப்பு இல்லாத நிலையை எட்டுகிறது. இந்த வருடம் தற்போது வரை ஒரேயொரு சம்பவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஒரு காலத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் கல் வீசுதல் நடந்தது. ஆனால் இப்போது அது வரலாறாகிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், முழு பள்ளத்தாக்கும் மூடப்பட்டிருக்கும். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக எப்படி நின்றார்கள் என்பதை, ஐந்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை. பெரும்பாலான பெரியோர்கள் இதுபோன்ற ஒன்றைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள். ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன், அந்த மாற்றத்திற்கு பின்னால் முழு நாடும் உள்ளது.
இவ்வாறு துணைநிலை ஆளுநர் பேசினார்.






