ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. காவல்துறை அதிகாரி வீரமரணம்

அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி வீரமரணடைந்தார்.பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. காவல்துறை அதிகாரி வீரமரணம்
Published on

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் நேற்று நடந்த மோதலில் ஒரு காவல்துறை அதிகாரி வீரமரணம் அடைந்தார்.

உதம்பூரின் சோஹன் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் முகாம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ராணுவத்தினர் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.  அதைத் தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகள் இடையே இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்தார். 

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com