என் மலர்tooltip icon

    குஜராத்

    • நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
    • மருத்துவரை தாக்கிய 3 போரையும் போலீசார் கைது செய்தனர்.

    குஜராத் மாநிலத்தில் 'அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

    தலையில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை காண வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

    நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவரை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
    • சக பயணிகள், மாணவர்களிடமும் பிரதமர் மோடி கலநத்துரையாடினார்.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், அகமதாபாத் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

    பச்சை கொடி காட்டி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பின்னர், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார். சக பயணிகள், மாணவர்களிடமும் அவர் கலநத்துரையாடினார்.

    இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே, வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது.

    110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

    வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.

    இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

    இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.

    புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

    • வாரத்திற்கு ஆறு நாள் சேவை கொண்டதாக நமோ பாரத் ரேபிட் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    • அகமதாபாத்- புஜ் நகரங்கள் இடையே 360 கி.மீட்டர் இடைவெளியில் இந்த ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று மாலை இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

    இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது.

    110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

    வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.

    இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

    இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.

    புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

    • பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.

    பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தொடர்ந்து பல முறை பாலியல் உறவு வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தன்மீதான குற்றப்பத்திரிகையை எதிர்த்து தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வக்கீல், பெண்ணின் அனுமதியுடனேயே இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்றும் இது பலாத்காரத்தின் கீழ் வராது என்றும் அந்த வக்கீல் வாதாடியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இருவரும் இடையிலான உறவு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதன் மூலம் தொடர்ந்துள்ளது என்று வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த உறவு பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளபடி ஏமாற்றியும் மிரட்டல் மூலமும் நடந்துள்ளது. பெண்ணின் அனுமதியுடனேயே இருவருக்கும் இடையில் பாலியல் உறவு இருந்தாலும் அது பெண்ணை பயமுறுத்தியும், தவறாக வழிநடத்தியும் இருக்குமாயின் பலாத்காரத்துக்கான சட்டப்பிரிவு 376 இந்த கீழ் வரும் என்று தெரிவித்து அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கு தொடர்பாக பலாத்காரம் என்ற முகாந்திரத்திலேயே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தார். 

    • முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.
    • 21-ம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது.

    பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2024) தொடங்கி வைத்தார்.

    அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    * மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளையும் காரணிகளையும் கையாள முயற்சித்தோம்.

    * 140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர்.

    * நாட்டின் பன்முகத்தன்மை, அளவு, திறன், செயல்திறன் ஆகியவை தனித்துவமானது. அதனால்தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளை நான் சொல்கிறேன்

    * அயோத்தி மற்றும் 16 இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணியாற்றி வருகிறோம்

    * அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை தயார் செய்து வருகிறது. முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.

    * 21-ம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
    • புஜ் மாவட்டத்தில் உள்ள லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    இந்தநிலையில் புஜ் மாவட்டத்தில் பலர் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.

    கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மொத்தம் 11 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் குழந்தைகள்.

    இந்தநிலையில் குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் புஜ் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புஜ் மாவட்டத்தில் உள்ள லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு 11 பேர் இறந்தனர். அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதானி ஜி.கே. அரசு ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் 30 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் டாக்டர்கள் தலைமையிலான 50 மருத்துவக் குழுக்களுடன், இருதய நோய் நிபுணர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு டாக்டர்களையும் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் காந்திநகரில் உள்ள குஜராத் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்துக்கும், புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு வந்த பிறகு இது எந்த விதமான காய்ச்சல் என்று தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
    • விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சி வைக்கப்படுவது வழக்கம்.

    அகமதாபாத்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு மண்டல் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதில், சமீபத்தில் இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவின் கேட்ச் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்ட சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

    • உடனே அந்த தம்பதி காரில் இருந்து இறங்கி மேற்கூரையின் மீது ஏறினர்.
    • தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து அவர்களை மீட்டனர்.

    குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்கும்போது அடித்து செல்லப்பட்டதால், ஒரு தம்பதி கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய கார் மீது சுமார் 2 மணி நேரம் ஆபத்தான நிலையில் இருந்தனர். இடார் நகரில் வெள்ள நீரோட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு அதிகாரிகள் நீர்மட்டம் குறைந்த பின்னர் தம்பதியினரை மீட்டனர்.

    கரோல் ஆற்றின் தரைப்பாலத்தை கார் கடக்க முயன்றபோது, சுமார் 1.5 கி.மீ. தூரம் தள்ளி, காரின் மேற்பகுதி மட்டும் தெரியும்படி தண்ணீருக்குள் மூழ்கியது.

    உடனே அந்த தம்பதி காரில் இருந்து இறங்கி மேற்கூரையின் மீது ஏறினர். அவர்கள் அதிகாரிகளால் மீட்கப்படும் வரை சுமார் 2 மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

    தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து அவர்களை மீட்டனர்.

    தனக்கு முன்னால் ஒரு வாகனம் வெற்றிகரமாக மறுபுறம் சென்றதைக் கண்டதால், அதைக் கடப்பது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாதையில் கடக்க முயன்றதாக சுரேஷ் மிஸ்திரி கூறினார்.

    • குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
    • புகையிலை அடிப்படையிலான பொருட்களுக்கு குஜராத் அரசு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்தது.

    அகமதாபாத்:

    குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், குஜராத்தில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்க, விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.

    குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை செப்டம்பர் 13-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரபிக்கடலில் உருவான புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயரிட்டது.
    • குஜராத் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்தது.

    அகமதாபாத்:

    குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இந்த கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 20,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இதற்கிடையே, அரபிக்கடலில் உருவான புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயரிட்டது. இதையடுத்து குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல் மந்திரி பூபேந்திர படேலும் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் மூழ்கியும் பலியாகினர்.

    வெள்ளத்தில் இருந்து சுமார் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

    • காயம் அடைந்த ஒருவரை கரைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் சென்றது.
    • வீரர்களுடன் கடலில் தரையிறங்கி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் எண்ணெய் உற்பத்தி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் டேங்கர் ஹரி லீலா என்ற இந்த கப்பலில் உள்ள பணியாளர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்தது.

    அதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவரை கரைக்கு கொண்டு வர இந்திய கடற்படை வீரர்கள் நான்கு பேருடன் லைட் ஹெலிகாப்டர் நேற்றிரவு புறப்பட்டது.

    ஹெலிகாப்டர் கப்பல் அருகே சென்றபோது தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடலில் அவசரமாக தரையிறங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்களும் மாயமானர்கள். அதில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற மூன்று பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகங்கள் கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று வீரர்களை தேடும் பணியில் நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

     

    அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை முதலைகள் இழுத்துச்சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. வெள்ளை நீர் வடிய வடிய இங்கு புகுந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷூட்டரில் பின்புறம் அமர்ந்துள்ள நபர் முதலையைக் கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் பிரதான சாலையில் வண்டியை ஓட்டிச்  செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    ×