அடக்கம் செய்த மறுநாள் உயிருடன் வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் திகில்!

ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது.பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் இருந்தார்.
அடக்கம் செய்த மறுநாள் உயிருடன் வீட்டுக்கு  வந்த நபர்.. குஜராத்தில் திகில்!
Published on

குஜராத்தில் தகனம் செய்யப்பட்ட நபர் மறுநாள் அவரின் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் நரோதா பகுதியை சேர்ந்த ப்ரிஜேஷ் சுதர் என்ற 43 வயது நபர் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார்.

இதைத்தொடர்ந்து ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்நிலையில் அவர் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் இருந்த ஒரு நடுத்தர வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உடலை அடையாளம் காண ப்ரிஜேஷ் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அந்த நபரின் உடல் வாகு காணாமல் போன ப்ரிஜேஷை ஒத்திருந்ததால் அவர்தான் ப்ரிஜேஷ் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

ஆனால் மறுநாளே [கடந்த வியாழக்கிழமை] வீட்டில் அவரது மறைவுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ப்ரிஜேஷ் வந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்தனர். பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே புதைக்கப்பட்டது யாருடைய உடல் என விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com