என் மலர்
குஜராத்
- நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கட்டுமானப்பணியின்போது சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் காடி என்று இடத்தில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.
நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இன்று மதியம் மதியம் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 10 தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.
- அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா ஜாம்நகர் மக்களவையில் இருந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தாயார் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். ஜடேஜா, ஜெயா ஜெட்லியின் மகள் அதிதி ஜெட்லியை மணந்தார்.தம்பதியருக்கு ஐமன் மற்றும் அமீரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அரச குடும்பம் பின்னணியைக் கொண்ட அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நவாநகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப், சத்ருசல்யாசின்ஹ்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா, ஒரு கடிதத்தில், அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சத்ருசல்யாசின்ஹ்ஜி அஜய்யின் தந்தையின் உறவினர் சகோதரர்.

இதுதொடர்பான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தசரா கொண்டாட்டம் - ஜம்சாஹேப் தசரா நாள் என்பது பாண்டவர்கள் தங்கள் இருப்பை மறைத்து 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து வெற்றி பெற்ற நாளாக நம்பப்படுகிறது.
இன்று, தசரா அன்று, நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் எனது நீண்ட நாள் யோசனைக்கு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டேன். எனது வாரிசாக அஜய் ஜடேஜாவை அறிவிப்பது தான் அது.
ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.
அஜய் ஜடேஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர்.
- காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.
அமகதாபாத்:
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த மாதம் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மாயமானார். ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன கடலோர காவல்படை விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 2-ந்தேதி ALH MK-III ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர். இதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ராணாவின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கிமீ தொலைவில் கடலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது என்று கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது.
- இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள்.
பண்டிகை என்றாலே எல்லோருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும். நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளசுகளையே மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் சமூக வலைத்தளத்தில் 2 நாளில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது. விழாவில் உற்சாகமான இசையைக் கேட்டதும் அவர்களுக்குள் இளமை பெருக்கடுத்துவிட ஆனந்தத்தில் தாண்டியா ஆட ஆரம்பித்துவிட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்த இளம் ஜோடிகள்கூட, தாங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு மூத்த ஜோடியின் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள். இணையவாசிகளின் இதயங்களையும் கவர்ந்து வைரலானார்கள்.
- ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
- இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பரை பார்ப்பதற்காக லட்சுமிபுரா பகுதிக்கு இரவு 11 மணியளவில் பைக்கில் சென்றார்.
ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். லட்சுமிபுரா பகுதியை கடந்து புறவழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் இவர்களது பைக்கை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேர் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் 3 பேர் தொடர்ந்து இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த 2 வாலிபர்கள் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்த இளம் பெண்ணின் ஆண் நண்பர் அவர்களை தடுத்தார். அப்போது ஆத்திரமடைந்த 3 வாலிபர்களில் ஒருவர் ஆண் நண்பரை பிடித்து கொண்டார்.
மற்ற 2 வாலிபர்களும் இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை அங்கேயே விட்டு விட்டு 3 பேர் கும்பலும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து இளம்பெண் வதோதரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வதோதரா புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் ஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் நகர பகுதிகளில் இரவு முழுவதும் நவராத்திரி பண்டிகைக்கான கர்பா கொண்டாட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. கொண்டாட்ட நேரங்கள் மீதான கட்டுப்பாடுகளை குஜராத் அரசு நீக்கியுள்ளது. நள்ளிரவில் கர்பா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்றவர்களால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் மகராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகர் பகுதியிலும் 21 வயது இளம் பெண் ஒருவரை 3 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சம்பவத்திற்கும் இந்த குற்றச்சாட்டையே கூறப்படுகிறது.
- வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
- போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோவில், மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கு, ஆத்திரத்தில் வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆசிரியரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A mathematics teacher at Madhav Public School in Ahmedabad's eastern region has been suspended after being caught on CCTV physically assaulting a student. Abhishek Patel was seen dragging the student outside while continuing to hit him. #Ahmedabad pic.twitter.com/7Q6qVoOCeg
— Our Ahmedabad (@Ourahmedabad1) October 1, 2024
- உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் [vaginal] அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது
- பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர்.
காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது நர்சிங் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் [vaginal] அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்படி என்று ஆன்லைனில் தேடி பெண்ணின் உறுப்பில் ரத்தம் வராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் சிறிது நேர்த்திலேயே பெண் மயக்கமடைந்த நிலையில் காதலன் தனது நண்பனுக்கு போன் செய்து அவனை வரவைத்து அவனுடன் சேர்ந்து பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி கூறியுள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் காதலன் முதலிலேயே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல் ஆன்லைனில் உபாயம் தேடிக்கொண்டிருந்ததாலேயே பெண் உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட கோடிக்கணக்கில் மதிப்புடைய கள்ளநோட்டுகள் சிக்கியுள்ளது. சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து இன்ஸ்பயர் ஆகி அதில் வருவது போல் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைத்த கும்பல் ஒன்று மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் படத்தை கொண்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான 500 ருபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்துப் பதுக்கிவைத்துள்ளது.
இந்த நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கள்ளநோட்டுகளை காவல்துறை தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக சூரத் நகரில் பதுங்கி இருந்த நால்வரை குஜராத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான அனுபம் கேர் நடிப்பில் எமர்ஜென்சி படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுற்றுலாப் பயணிகளின் பஸ் திடீா் பெருவெள்ளத்தில் சிக்கியது.
- பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா். பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா்.
பாவ்நகர்:
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் நேற்று மாலை சிக்கிக் கொண்டது. அவா்களை பத்திரமாக மீட்பு படையினா் மீட்டபோதும், வெள்ளம் குறைவதற்காக அங்கே லாரியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாவ்நகா் பேரிடா் மேலாண்மைப் பிரிவு அதிகாரி சதீஷ் ஜாம்புஜா மேலும் கூறுகையில், 'பாவ்நகரில் உள்ள கோலியாக் கிராமத்தில் உள்ள நிஷ்காலங்க் மகாதேவ் கோவிலுக்கு சென்று திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகளின் பஸ் திடீா் பெருவெள்ளத்தில் சிக்கியது.

லாரியில் அப்பகுதிக்கு சென்ற மீட்புப் படையினா் பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா். ஆனாலும் வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் அவா்கள் லாரியிலே அங்கே உள்ளனா். வெள்ளம் குறைந்தபிறகு அவா்கள் மீட்டு வரப்படுவாா்கள்' என்றாா்.
- சொத்து தகராறு ஏற்பட்டதால் 80 வயது கணவனை பிரிந்து மனைவி தனியே வாழ்ந்து வந்தார்.
- கணவரிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.
குஜராத்தில் 2018 ஆம் ஆண்டு முனேஷ் குமார் குப்தா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் (76) இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கணவரின் மாத ஓய்வூதியம் 35,000 ரூபாயில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
இன்று அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சவுரப் ஷியாம் ஷாம்ஷேரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகள் கவலை அளிப்பதாகவும் கலியுகம் வந்து விட்டது போல் உள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அந்த குப்தாவின் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, அடுத்த விசாரணையில் தம்பதியினர் சமரசம் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
- 55 வயதான பள்ளி பிரின்சிபல் கோவிந்த் நாத் போலீசின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்
- சிறுமி ஒத்துழைக்காமல் கத்தியதால் கழுத்தை நிறுத்து கொலை செய்தேன்
குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஒத்துழைக்க மறுத்த 6 வயது சிறுமியை தனியார் பள்ளி தலைமையாசிரியர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தாகோத் [Dahod] மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்திலிருந்து புதைக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியின் உடல் கடந்த வாரம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உயிரிழந்த சிறுமி படித்து வந்த பள்ளியின் பிரின்சிபல் தான் சிறுமியைத் தினமும் பள்ளிக்கு தனது காரில் அழைத்துச்செல்வார் என்று சிறுமியின் தாய் போலீசிடம் தெரிவித்தார். எனவே 55 வயதான பள்ளி பிரின்சிபல் கோவிந்த் நாத் - யிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அன்றைய தினம் காலையில் தான் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு தான் வேறு ஒரு வெளியாகப் பள்ளியிலிருந்து சென்றதாகக் கூறியுள்ளார். கோவிந்த் நாத் அன்றைய தினம் சென்ற இடங்களை அவரின் போன் லொகேஷன் மூலம் போலீசார் டிராக் செய்துள்ளனர்.
அவர் சிறுமியைப் பள்ளியில் இறக்கிவிட்டதாக சென்ற அன்றைய தினம் காலை பள்ளிக்கு தாமதமாகவே வந்தது தெரியவந்தது. இதை வைத்து பிரின்சிபலிடம் மீண்டும் விசாரித்ததில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று காலை சிறுமியை வீட்டிலிருந்து காலை 10.20 மணிக்கு அழைத்துக்கொண்டு சென்றதாக சிறுமியின் தாய் தெரிவித்தார். ஆனால் சிறுமி பள்ளிக்கு வரவே இல்லை என்று ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்தனர்.
சிறுமியை பள்ளிக்கு செல்லும் வழியில் தான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காமல் கத்தியதால் கழுத்தை நிறுத்து கொலை செய்தேன் என்று பிரின்சிபல் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடலை தனது காரில் வைத்து பூட்டிவிட்டு மாலை 5 மணியளவில் பள்ளிக் சட்டத்துக்கு பின்னால் சிறுமியை புதைத்தாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரின்சிபலை போலீஸ் கைது செய்தது.
- இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியது.
- நில நடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
கட்ச்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று காலை 10.05 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 3.3 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
குஜராத் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் சமீபகாலமாக அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






