என் மலர்
இந்தியா

பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் சிறை: ஜாமின் பெற்று மீண்டும் அதே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்
- 18 மாதத்திற்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
- ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் பரூச்சில் 70 வயது மூதாட்டியை 35 வயது நபர் கற்பழித்த குற்றச்சாட்டிற்காக ஜெயில் சென்ற நிலையில், ஜாமின் பெற்று மீண்டும் அதே மூதாட்டியை கற்பழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் 70 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை ஷைலேஷ் ரதோடு என்பவர் கடந்த 15-ந்தேதி மற்றும் 22-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் மூதாட்டியை கற்பழித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக யாரிடமாவது கூறினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
ஆனால் மூதாட்டி, அமோத் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கெடுமையை விவரித்துள்ளார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைலேஷ் ரத்தோட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
18 மாதங்களுக்கு முன்தாக இதே மூதாட்டியை கற்பழித்ததற்காக ஷைலேஷ் ரதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே மூதாட்டியை கற்பழித்துள்ளார். போலீசார் அவரை தேடிவருகின்றனர்.






