என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.
    • வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சொத்துக்களை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

    மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற பின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

    வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.

    கணிசமான மதிப்பு அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தங்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒவ்வொரு அசையும் சொத்துகளையும் வெளியிட வேண்டியதில்லை.

    பொருத்தமற்றது என கருதும் விசயங்களை பொது அலுவலகத்தில் தெரிவிக்காத வகையில் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • ஆம்ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    திகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதுவரை அவர் பதவி விலகவில்லை.

    இதற்கிடையே டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா நீர், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனம் போன்ற துறைகளின் கூட்டத்தை கூட்டினார்.

    ஆம் ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், அதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • பாராளுமன்ற தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உளவு துறையினர் அளித்துள்ள தகவல் படி அவருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நாடு முழுவதும் ராஜீவ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

    • இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.
    • 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள், முதலீடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

    அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.

    2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமராவார் என பா.ஜ.க. தெரிவித்தது.
    • ஜூன் முதல் வாரத்தில் 200-க்கு சரிந்துவிடும் என முன்னாள் தலைமை ஆணையர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளதௌ. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராக [பதவி ஏற்பார் என பாஜக தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இப்போது 400+ என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175 முதல் 200-க்கு வந்து விடும்.

    நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். அனைத்துப் பதிவுகளும் அரசியலை பேசவேண்டும் என்பதில்லை என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    முன்னாள் தலைமை தேர்தர் ஆணையர் பா.ஜ.க.வையே மறைமுகமாக சாடியுள்ளார் என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது.
    • நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 8 கோடி உத்தரவாத அட்டைகளை வீடுகளுக்கு விநியோகித்து வருகிறோம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா என 3 சூப்பர் ஸ்டார் பிரச்சாரகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

    ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது. இது ஒரு அரசியல் நபருக்காக செய்யப்பட்டது.

    நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள். மதத்தை அரசியலாக்குவது மதத்தையும் அரசியலையும் வீழ்த்துகிறது என தெரிவித்தார்.

    • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது - மோடி
    • முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார் - காங்கிரஸ்

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில், "பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
    • தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

    தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது
    • மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

    அசாம் ட்ரிப்யூன் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.

    அதில், மணிப்பூர் கலவரத்தின்போது தக்க நேரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசின் முயற்சிகளால் அம்மாநிலத்தின் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும், "மணிப்பூரில் கலவரம் உச்சகட்டத்தை எட்டிய நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு சென்று, அங்கு தங்கி கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மணிப்பூர் மாநில அரசுக்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நிதி உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது" என்று மோடி கூறியுள்ளார்.

    மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

    • நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
    • இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-

    பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது

    1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்

    வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?

    மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை கைதுசெய்தது.
    • அவரது கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

    இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    கெஜ்ரிவால் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×