என் மலர்
டெல்லி
- இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
- இந்திய தொழில் கூட்டமைப்பின் மையங்களிலிருந்தும் காணொலி வாயிலாக பலர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியப் பயணம் என்ற கருப்பொருளில் மாநாடு நடந்தது.
மாநாட்டில் தொழில்துறை, அரசு, தூதரக அதிகாரிகள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மேலும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மையங்களிலிருந்தும் காணொலி வாயிலாக பலர் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று காலத்தின் போது நாம் விவாதங்களை நடத்தினோம், அந்த விவாதங்களின் மையப் புள்ளியாக வளர்ச்சியை மீண்டும் பெறுவது இருந்தது. இந்தியா விரைவில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று அப்போது கூறினேன். இன்று இந்தியா 8 சதவீத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்று நாம் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணம்' பற்றி விவாதிக்கிறோம். இந்த மாற்றம் வெறும் உணர்வுகள் அல்ல. நம்பிக்கை. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. எனது 3-வது ஆட்சி காலத்தில் விரைவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும்.
10 ஆண்டுகளில் பட்ஜெட் அளவு 3 மடங்கு அதிகரித்து ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மூலதனச் செலவு என்பது வள முதலீட்டின் மிகப்பெரிய உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டில், மூலதனச் செலவு சுமார் 90,000 கோடி ரூபாயாக இருந்தது. அது ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்தது. இன்று மூலதனச் செலவு ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன் ரூ.5 லட்சம் கோடி ஊழல்கள் நடந்ததை அனைவரும் அறிவீர்கள். பொருளாதாரம் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தேசத்தின் முன்வைத்தோம். பின்னர் இந்தியாவின் தொழில்களை உயரத்திற்கு கொண்டு வந்தோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த பட்ஜெட், வளர்ந்த பாரதத்துக்கு வழி வகுக்கும். எங்கள் திசையில் வேறுபாடு இல்லை. அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி உள்ளோம். தேசத்துக்கு முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
- இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.
இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.
இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.
இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!
மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.
மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
- நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.
- கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசினார்.
புதுடெல்லி:
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு மேல் சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் சபை தலைவரும், துணை ஜனாதிபதிபதியுமான ஜெகதீப் தன்கர் பேசும் போது "வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு. காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்கு ராணுவம் சென்றதா, மீட்பு பணிகள் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவை தலைவரான நீங்கள் தகவல் கொடுக்கிறீர்கள். அரசிடம் இருந்து நாங்கள் தகவலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 500 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். நிலைமையை மத்திய அரசு உணர வேண்டும். கேரள அரசிடம் போதிய நிதி இல்லை. மத்திய அரசு உதவ வேண்டும்.
நாங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். துயரமான நேரத்தில் எங்களுக்கு உதவுங்கள். உடனடியாக நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
வயநாடு நிலச்சரிவு விஷயத்தை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம் என்று மேல்சபை தலைவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசும் போது, "கேரள முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டு அறிந்து இருக்கிறார். கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கேரள அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது. தற்போது அங்கு சிக்கியவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம்" என்றார்.
- மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின.
- . தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.
தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோச்சிங் சென்டர்கள் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கட்டிடத்தின் தரைதளத்தில் சட்டவிரோதமாக நூலகங்களை இயக்கி செயல்பட்டு வந்த ரவு உட்பட 13 கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மாணவர்கள் இதுநாள்வரை கோச்சிங் சென்டர்களில் சந்தித்துவந்த இன்னல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த மாநிலங்களவை மற்றும் மக்களவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.
மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின. இந்த விவாதத்தில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், இந்த பயிற்சி மையங்கள் கேஸ் சேம்பர் அறைகளுக்கு [இன அழைப்புக்காக ஹிட்லர் வதை முகாம்களில் பயன்படுத்தியதற்கு] சற்றும் குறைந்ததல்ல. தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.
இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மாணவர்களிடமிருந்து தானே. போட்டித்தேர்வு பயிற்சி என்பது [லாபம் கொழிக்கும்] வியாபாரமாகியுள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில் மாநிலங்களவை விவாதத்தில் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளின் இறப்பு குறித்து பேசும்போது, அமிதாப் பச்சன் மனைவியும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்கலங்கி வருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.
- அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடி வசூல்
2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.
அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங் ஆப் பரோடா பயர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கொடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடிவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
முறையான மினிமம் பேலன்ஸ் இல்லாமல் வங்கிக்கணக்குகளில் அடுத்தமுறை பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அதிலுருந்து அபாரதத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்படவே செய்கிறது. கடந்த காலங்களில் மினிமம் பேலன்ஸை பெரிதும் வலியுறுத்தாத வங்கிகள், சமீப காலமாக மிகவும் தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு திரவுபதி முர்மு பயணம்.
- டிமோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி செல்வது இதுவே முதல் முறை.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி வேனி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார். அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.
இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார்.
இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார். அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார்.
அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதி தென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜோஸ்ர மோஸ் ஹோர்டா, பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவ் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை. ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
- மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன்.
மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the landslides in parts of Wayanad. The injured would be given Rs. 50,000. https://t.co/1RSsknTtvo
— PMO India (@PMOIndia) July 30, 2024
- குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
- விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.
குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
விசாரணை குழு 30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெள்ளத்தில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
- உங்களுடைய கட்சியில் இருந்து இந்த சமூகத்தினரைச் சேர்ந்த ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லையா?.
- அவர்களில் ஒருவரை ஏன் எதிர்க்கட்சி தலைவராக்கவில்லை?.
பாராளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி-கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பட்ஜெட்டுக்கான அல்வா நிகழ்ச்சியில் கூட ஒருவர் கூட எஸ்சி, எஸ்டி சமூகத்தினரை சேர்ந்தவர் கிடையாது எனக் கூறினார்.
இதற்கு பாஜக எம்.பி. பிரிஜ்மோகன் அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார். இந்த சமூகத்தினரில் ஒருவரை ஏன் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லைப் பகுதி உள்பட பல்வேறு பிராந்தியத்தின் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகளின் மேம்பாட்டிற்கான அரசின் செயல்திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த பட்ஜெட்டை எதிர்ப்பதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் விரும்பும் ஒரே முன்னேற்றம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து குடும்பங்கள் முன்னேற்றம் என்பதுதான்.
நீங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி குறித்து பேசுகிறீர்கள். உங்களுடைய கட்சியில் இருந்து இந்த சமூகத்தினரைச் சேர்ந்த ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லையா? அவர்களில் ஒருவரை ஏன் எதிர்க்கட்சி தலைவராக்கவில்லை?.
99 இடங்களில் வென்ற கட்சி, 240 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை தோல்வியடைந்ததாக கூறி வருகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவை முன்னெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியால்தான் இந்தியா 1947-ல் பிரிக்கப்பட்டது. 1962-ல் சீனா இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்றார் பிரிஜ்மோகன் அகர்வால்.
- இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்- மம்தா
- கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் ராகுல் காந்தி சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நுழையும்போதும், வெளியேறும்போதும் எம்.பி.க்களை மீடியாக்கள் கேமரா மூலம் படம் பிடிப்பதுடன் பேட்டி எடுப்பதும் உண்டு. இந்த நிலையில் எம்.பி.க்களிடம் பேட்டி எடுக்கக் கூடாது என மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது எதேச்சதிகார செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். அத்துடன். இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
அப்போது நாடாளுமன்ற விதிகள் பற்றி ராகுல் காந்திக்கு நினைவூட்டிய ஓம் பிர்லா, இதுபோன்ற பிரச்சனைகளை தன்னுடன் நேரில் விவாதிக்க வேண்டும் என்றும், அவையில் எழுப்பக்கூடாது என்றும் கூறினார்.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் மீடியா நபர்களை சந்தித்து கூறினார்.
லோக்சபா சபாநாயகர் பத்திரிகையாளர்கள் குழுவை சந்தித்து, அவர்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சிறந்த வசதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
- செப்டம்பர் மாதத்திற்குள் ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கப்படவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் எம்.பி. ருஹுல்லா மெஹ்தி குறிப்பிட்டு பேசும்போது தேர்தலுக்கு பிச்சை எடுக்க நான் இங்கே வரவில்லை எனத் தெரிவித்தார்.
மக்களவை மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது ருஹுல்லா மெஹ்தி பேசும்போது கூறியதாவது:-
நான் இங்கு தேர்தலுக்காக பிச்சை எடுக்க வரவில்லை. செப்டம்பர் மாதத்திற்குள் ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் வெறும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு ருஹுல்லா மெஹ்தி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்டது. அத்துடன் செப்டம்பர் 2024-க்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தெரவித்திருந்தது.
மார்ச் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- அக்னிவீர் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சி நடக்கிறது.
- நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.
பட்ஜெட் மீதான விவாத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அக்னிபாத் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேர்ந்த அக்னிவீர் (வீரர்) வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என ராஜ்நாத் நாத் அவையில் தெரிவித்தார். ஆனால், அது இன்சூரன்ஸ் மூலமாக வழங்கப்பட்ட தொகை. இழப்பீடாக வழங்கப்பட்டது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அக்னிபாத் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கிறார். இது தொடர்பாக விவாதத்தின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகுந்த பதில் அளிப்பார்.
நம்முடைய வீரர்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகிறார்கள். இது நம்முடைய தேசிய பாதுகாப்பு குறித்த உணர்வுப்பூர்வமான பிரச்சனை. அக்னிவீர் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப முயற்சி நடக்கிறது. நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.






