என் மலர்
அசாம்
- 3,524.38 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
- 696 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குஷியாரா நதி மற்றும் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 20 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
54 வருவாய் வட்டங்களில் உள்ள 758 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மாநில அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 56 வருவாய் வட்டங்களிலும், 20 மாவட்டங்களில் 764 கிராமங்களிலும் 3,64,046 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

3,524.38 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன,696 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.52 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் 10,272 பேர் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு விநியோகிக்கப்படுகிறது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் நதிகளின் கரையோரங்களில் வசிப்பவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா கேட்டுக் கொண்டார்.
- வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அசாம் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 32 பேர் உயிருலந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாமின் கவுகாத்தி மேகலயாவின் துரா நகரங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சாலை துண்டிப்பால் இரு பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- பூர்வீக குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.
- மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அசாம் மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வெகுதூரத்தில் (Remote Area) உள்ள பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "அசாம் மிகவும் மாறுப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான மாநிலம். அசாமின் சில பகுதிகயில் வாழும் மக்கள் பாதுகாப்பற்ற நிலை எனக் கருதுகிறார்கள். அவர்கள் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தகுதியுள்ள மக்களுக்கு அரசு துப்பாக்கி உரிமம் வழங்கும். அவர்கள் பூர்வீக குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார்.
துப்ரி, மொரிகான், பர்பேட்டா, நாகோன் மற்றும் தெற்கு சல்மாரா-மன்காச்சர் பகுதிகளில் உள்ளவர்கள் இதுபோன்ற பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த இடங்களில் நம்முடைய மக்கள் மைனாரிட்டியாக உள்ளனர்" என்றார்.
- இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் பெண்ணை தரதரவென இழுத்து சென்றனர்.
- அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது
அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் சிறை காவலர்களான ஹரேஷ்வர் கலிதா (45) மற்றும் கஜேந்திரா கலிதா (50) ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் அவ்வழியே சென்ற இளம்பெண்ணை அவர்கள் இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்து சென்றனர்.
அந்த பெண் கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. இதன்பின்பு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, அந்த வழியே போலீசார் ரோந்து பணிக்காக வந்துள்ளனர்.
அவர்கள் சிறை காவலர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது
- உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த லாரியில் ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய் ஆகும்.
அசாம் மாநிலம் கார்பி அங்லாங்க் மாவட்டம் அருகே உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த லாரியில் இருந்து 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் ஆகும்.
உத்தர பிரதேசத்தில் இருந்து அசாம் மாநிலம் நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் கத்காதி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது லாரியில் ரகசிய அறை ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை திறந்து பார்த்தபோது, ஏழு பாக்கெட்டுகளில் 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்ததுடன், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அசாம் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது.
- தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு அசாம் மநில அரசு கட்டமைப்புகள் மற்றும் போட்டிக்கான தளத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தள்ளார்.
கவுகாத்தியின் சருசாஜாய் மற்றும் பார்சபாரா ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒரு மிகப்பெரிய மைதானங்கள் உள்ளன. தற்போது புதிதாக அமையவிருக்கும் மைதானம் 20 ஆயிரம் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.
இந்த மைதானம் அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி வருகிறது. பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும்.
சருசாஜாய் மைதானத்தில் தடகள டிராக், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. பார்சபாரா மைதானம் கிரிக்கெட் மைதானமாகும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.
- தனது குழந்தை டியூஷன் முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்தார்.
- பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள சாலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில், தாய் ஒருவர் பெற்ற மகனை தனது காதலுடன் சேர்ந்து கொன்று சூட்கேஸில் அடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்த 10 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தனது குழந்தை டியூஷன் முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்தார். சிறுவனின் உடல் பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள சாலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
தாயின் வாக்குமூலங்களில் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் அப்பெண் தனது காதலுடன் சேர்நது மகனை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
- கடந்த ஒரு மாதமாக அசாம் முழுவதும் ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் மூலம் பிஹூவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளோம்.
- பண்டிகை காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது.
பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்து வரும் நிலையில் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த ஒரு மாதமாக அசாம் முழுவதும் ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் மூலம் பிஹூவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளோம். உற்சாகமான பங்கேற்பு மற்றும் பங்களிப்புகளுக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், இந்த பண்டிகை காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. மே 10-ந்தேதி வரை கொண்டாட திட்டமிடப்பட்ட அனைத்து பிஹூ நிகழ்வுகளையும் ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த துடிப்பான கொண்டாட்டத்தை அது கொண்டாடப்பட்ட அதே ஒற்றுமை மற்றும் மனப்பான்மையுடன் ஒரு அழகான முடிவுக்குக் கொண்டுவருவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
- அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக ஏஐயுடிஎஃப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமை அசாம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து , வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இந்நிலையில் இதை விமர்சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக அசாம் எதிர்கட்சியான ஏஐயுடிஎஃப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமை அசாம் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா, "நாங்கள் அவர் பேசும் வீடியோவை பார்த்தோம். தாக்குதலில் பாகிஸ்தான் உடந்தையை மறைத்து பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஏஐயுடிஎஃப் கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், "எம்எல்ஏவின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.
- பாஜக அரசின் கீழ் அனைத்து மத மக்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
- இந்துக்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி இந்த தாக்குதல் நடத்தியவர்கள், நடத்தியவர்களுக்கு பின்னால் உள்ளவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இந்துக்கள், முஸ்லிம்கள் ,இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம் பொன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஹோஜாய் என்ற பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பேரணியில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசும்போது கூறியதாவது:-
பயங்கரவாதிகள் இதற்கு முன்னதாக ஒருபோதும் தாக்குதல் நடத்தப்பட்டபோது மத அடையாளத்தை கேட்டதில்லை. ஆனால், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் பாதுகாப்பாக இருப்போம். பாஜக அரசின் கீழ் அனைத்து மத மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். இந்துக்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிட வேண்டும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பொன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும்.
அசாமில் வாழும் சிலர் மறைமுகமாக பாகிஸ்தானை ஆதரிக்கின்றனர். அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்றாலும், தப்பிவிடமாட்டார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் 15 நாட்களாக பாகிஸ்தானில் தங்கியுள்ளார்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
- வன்முறையில் தொடர்புடைய 150 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
- அனுமதியின்றி 400 பேர் வரை வீதிகளில் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டத்தில் சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. வன்முறையில் தொடர்புடைய 150 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
மேலும் திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் பத்ருஜ்ஜாமன் தலைமையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் காவலர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசினர்.
இதில், குப்ஜார் பகுதியில் நடந்த வன்முறையில் கைலாஷாகர் பகுதிக்கான சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து அசாம் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சில்சார் பெரெங்கா பகுதியில், அனுமதியின்றி 400 பேர் வரை வீதிகளில் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டத்தில் சென்றனர்.
தேசிய கோடி மற்றும் கறுப்புக்கொடிகளை ஏந்திய அவர்கள், ஆளும் பாஜக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் கற்களை வீசத் தொடங்கியதால் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் கூட்டம் கலைக்கப்பட்டு போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.






