என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் முதல்வர் தன்னை ராஜா என நினைக்கிறார்: ஊழல் வழக்கில் சிறை செல்வார்- ராகுல் காந்தி
    X

    அசாம் முதல்வர் தன்னை ராஜா என நினைக்கிறார்: ஊழல் வழக்கில் சிறை செல்வார்- ராகுல் காந்தி

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்காக சிறைக்கு செல்வார் என காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முதல்வர் தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மகாராஷ்டிரா தேர்தலை திருடியது. பீகார் மீண்டும் அதை செய்ய முயற்சி செய்கிறார்கள். வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுபோன்ற எந்த முயற்சியும் நடப்பதை தடுக்க விழிப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×