search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அலுவலகத்திற்கு கிளம்பியாச்சா.. இதை மறக்காதீங்க...
    X
    அலுவலகத்திற்கு கிளம்பியாச்சா.. இதை மறக்காதீங்க...

    அலுவலகத்திற்கு கிளம்பியாச்சா.. இதை மறக்காதீங்க...

    கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை என்பதை நினைவுகூர்ந்து செயல்பட வேண்டியது முக்கியமானது. அதே மனநிலையில் எல்லா விஷயங்களையும் கையாளுவது அவசியம்.
    ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் நிறைய பேர் அலுவலகம் செல்ல தொடங்கி இருக்கிறார்கள். வீட்டில் இருந்தும் நிறைய பேர் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மனநிலையில் இருந்து விடுபட்டு உற்சாகமாக அலுவலகம் செல்ல தொடங்கி இருப்பவர்கள் ஊரடங்குக்கு முன்புவரை பின்பற்றிவந்த வழக்கமான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானது.

    கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை என்பதை மனதில் நிலைநிறுத்திக்கொண்டு ஒவ்வொரு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்து பவர்கள் சமூகவிலகலை கடைப்பிடிப்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். பொதுபோக்குவரத்து வாகனங்களில் ஏறும்போது சக பயணிகளிடம் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நெருக்கத்தை கடைப்பிடிக்கக்கூடாது. தேவையில்லாமல் கைகளை கொண்டு எதையும் தொடக்கூடாது. அலுவலகம் சென்றதும் உடனே கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்வதற்கு மறந்துவிடக்கூடாது. கைவசம் எப்போதும் கையடக்க சானிடைசர் வைத்துக்கொள்வது நல்லது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு உடன் பணிபுரியும் சக நண்பர்களை பார்த்ததும் மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து அணைக்கவோ, கைக்குலுக்கவோ கூடாது. நண்பர்களை பார்த்ததும் உற்சாகம் பொங்கினாலும் அதை கட்டுப்படுத்துவது அவசியமானது. கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை என்பதை நினைவுகூர்ந்து செயல்பட வேண்டியது முக்கியமானது. அதே மனநிலையில் எல்லா விஷயங்களையும் கையாளுவது அவசியம்.

    அலுவலக நிர்வாகம் கிருமிநாசினி பயன் படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுவது போலவே நீங்களும் பாதுகாப்பு விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம். உடன் பணியாற்றுபவர்களிடம் இருந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தவறாதீர்கள். அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டுமின்றி பணியில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். குறைந்தபட்சம் மீண்டும் உபயோகப்படுத்தும் விதமாக நான்கு முகக்கவசங்களையாவது கைவசம் வைத்திருப்பது நல்லது. அலுவலகத்திற்கு செல்லும்போது அணியும் முகக்கவசத்தை திரும்பி வந்ததும் கழற்றி சுத்தம் செய்துவிடுங்கள். ஒருமுறை அணிந்த முகக்கவசத்தை சுத்தம் செய்யாமல் மறுமுறை அணியாதீர்கள்.

    அலுவலகத்தில் இருக்கும் கதவுகள், மேசைகள், ஜன்னல்கள் உள்பட நீண்ட நாட்களாக புழக்கத்தில் இல்லாத இடங்களில் கை வைக்காதீர்கள். சக பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிடும்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அதுபோல் உங்கள் உணவை மற்றவர்களுக்கு கொடுப்பது, அவர்களுடைய உணவை வாங்குவது போன்ற உணவு பரிமாற்றத்தில் ஈடுபடுவதை சிலகாலம் தவிர்த்து விடுவது நல்லது. டீ குடிப்பது, சிறிது நேரம் நடப்பது என எப்போதும்போல் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள்.
    Next Story
    ×