search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மருத்துவ காப்பீடு
    X
    மருத்துவ காப்பீடு

    86 வயது வரை மருத்துவ காப்பீடு

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம்.
    பொருளாதாரம் நாளுக்குநாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள். மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

    குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிளைம் செய்து கொள்ளலாம்.திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனித்தனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது.

    3 மாத குழந்தை முதல் 86 வயது வரை மருத்துவ காப்பீடு பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக்கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும். பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும்.

    இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை கிளைம் செய்ய முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும்பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் கிளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்களுக்கு மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் சிகிச்சை நீடிக்கும். இது போன்ற நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.
    Next Story
    ×