search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்களை மதிப்பீடு செய்யும் ‘மதிப்பெண்கள்’
    X
    உங்களை மதிப்பீடு செய்யும் ‘மதிப்பெண்கள்’

    உங்களை மதிப்பீடு செய்யும் ‘மதிப்பெண்கள்’

    நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக உருவாக வேண்டும் என்றால் உங்களிடம் குறிப்பிட்ட சில குணாதிசயங்கள் இருக்கவேண்டும். அவை உங்களிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய இதுவே சிறந்த நேரம்.
    நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக உருவாக வேண்டும் என்றால் உங்களிடம் குறிப்பிட்ட சில குணாதிசயங்கள் இருக்கவேண்டும். அவை உங்களிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய இதுவே சிறந்த நேரம். ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு இந்த பரிசோதனைக்கு தயாராகுங்கள். உங்களுக்காக 12 கேள்விகள்:-

    1. மற்றவர்கள் நல்ல விஷயங்கள் செய்யும்போது பாராட்டுவீர்களா?

    ஒருபோதும் இல்லை - 1

    அரிதாக பாராட்டுவேன் - 2

    எப்போதாவது - 3

    பெரும்பாலும் - 4

    எல்லா நேரமும் - 5

    2. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீங்கள் மேம்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?

    இல்லை - 1

    அரிதாக உணர்கிறேன் - 2

    எப்போதாவது உணர்கிறேன் - 3

    பெரும்பாலும் உணர்கிறேன் - 4

    எல்லா நேரமும் உணர்கிறேன் - 5

    3. ஒருவரை பார்த்ததும் அவரிடம் நட்பு பாராட்டுவீர்களா?

    ஒருபோதும் இல்லை - 1

    அரிதாக - 2

    எப்போதாவது - 3

    பெரும்பாலும் - 4

    எல்லாநேரமும் - 5

    4. வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி ஒவ்வொன்றும் அனுபவம் என்று கருதுகிறீர்களா?

    இல்லை - 1

    அரிதாக கருதுவேன் - 2

    எப்போதாவது கருதுவேன் - 3

    பெரும்பாலும் கருதுவேன் - 4

    எல்லா நேரமும் கருதுவேன் - 5

    5. நெருக்கமான நண்பனால் அலட்சியப்படுத்தப்பட்டால் மனங்கலங்கி போய்விடுவீர்களா?

    ஒருபோதும் இல்லை - 5

    அரிதாக - 4

    எப்போதாவது - 3

    பெரும்பாலும் - 2

    எல்லா நேரமும் - 1

    6. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்களா?

    ஒருபோதும் இல்லை - 1

    அரிதாக - 2

    எப்போதாவது - 3

    பெரும்பாலும் - 4

    எல்லாநேரமும் - 5

    7. உங்கள் மனநிலை, உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைப்பீர்களா?

    ஒருபோதும் அப்படி நினைப்ப தில்லை - 1

    அரிதாக நினைப்பேன் - 2

    எப்போதாவது நினைப்பேன் - 3

    பெரும்பாலும் நினைப்பேன் - 4

    எல்லா நேரமும் நினைப்பேன் - 5

    8. உங்களுக்கு பிடித்தமான 10 பேரின் பெயரை உங்களால் வேகமாக சொல்ல முடியுமா?

    முடியாது - 1

    அரிதாக முடியும் - 2

    எப்போதாவது முடியும் - 3

    பெரும்பாலும் முடியும் - 4

    எல்லா நேரமும் முடியும் - 5

    9. கடந்த மாதத்தைப் பற்றி நினைக்கும்போது உடனே வெற்றிதானே உங்கள் நினைவுக்கு வரும்?

    இல்லை - 1

    அரிதாக வெற்றி நினைவுக்கு வரும் - 2

    எப்போதாவது நினைவுக்கு வரும் - 3

    பெரும்பாலும் நினைவுக்கு வரும் - 4

    எல்லா நேரமும் வெற்றி நினைவுக்கு வரும் - 5

    10. நண்பனை விமர்சிப்பதைவிட அதிகம் பாராட்டத்தானே செய்வீர்கள்?

    இல்லை - 1

    அரிதாக பாராட்டுவேன் - 2

    எப்போதாவது பாராட்டுவேன் - 3

    பெரும்பாலும் பாராட்டுவேன் - 4

    எல்லா நேரமும் பாராட்டுவேன் - 5

    11. தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாகும்போது நிலைகுலைந்து போவீர்களா?

    இல்லை - 5

    ஆம்.. அரிதாக - 4

    ஆம்.. எப்போதாவது - 3

    ஆம்.. பெரும்பாலும் - 2

    ஆம்..எல்லா நேரமும் - 1

    12. வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருக்கிறீர்களா?

    இல்லை - 1

    அரிதாக மகிழ்ச்சியடைகிறேன் - 2

    எப்போதாவது மகிழ்ச்சியடைகிறேன் - 3

    பெரும்பாலும் மகிழ்ச்சியடைகிறேன் - 4

    எல்லா நேரமும் மகிழ்ச்சியடைகிறேன் - 5

    -கேள்விகளுக்கு நிதானமாக சிந்தித்து பொருத்தமான பதிலில் ‘டிக்’ அடியுங்கள்.

    - ‘டிக்’ அடித்ததன் அருகில் இருக்கும் மதிப்பெண்களை கூட்டுங்கள்.

    39-க்கும் கீழ்:

    உங்களிடம் எதிர்மறை சிந்தனை அதிகம் இருக்கிறது. மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியை அதிகரிக்க தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் உங்களுக்கு உடனடி அவசியம்.

    40 முதல் 44 வரை:

    உங்களிடம் துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியை மேம்படுத்துங்கள்.

    45 முதல் 49 வரை:

    உங்களிடம் போதுமான மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அது குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    50 முதல் 54 வரை:

    நீங்கள் மகிழ்ச்சியான மாமனிதர். உங்களிடம் ‘பாசிட்டிவ் திங்கிங்’ அதிகமாக இருக்கிறது.

    55-க்கு மேல் :

    நீங்கள் மகிழ்ச்சியின் மைந்தர். உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
    Next Story
    ×