search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி
    X
    பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி

    பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி

    மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
    மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி என்பது அறிந்ததே. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மேலும் இஞ்சியை உரிய முறையில் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.

    இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் அதிகம் உள்ளதால் செரிமான கோளாறு, சளி மற்றும் இருமல் ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும். அத்தோடு இஞ்சி வலி நிவாரணியாகவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆசிய சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகக் கருதப்படும் இஞ்சி, உடலில் ஏற்படும் ஒவ்வாமையையும் தடுக்க உதவுகிறது. பொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்க இஞ்சி எவ்வாறு பயன்படுகிறது என்பதற்கு மருத்துவர் ஒருவர் அளித்த விளக்கம் வருமாறு:-

    இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும். பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் அவிய விட வேண்டும். சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்தில் தண்ணீரின் நிறம் மாறத்தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் இந்த இஞ்சி சாற்றின் சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்க்கால்களில் படும் விதமாக பயன்படுத்துங்கள். இது ½ மணி முதல் 1 மணி நேரம் வரை தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ‌ஷாம்பு தேய்த்து தலை முடியையை கழுவுங்கள்.

    இவ்வாறு வாரம் ஒரு முறை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் தலை அரிப்பு குறைந்து விடும். மேலும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். இப்படி செய்தால் பொடுகு தொல்லையில் இருந்து இயற்கையாகவே விடுதலை பெறலாம்.
    Next Story
    ×