search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த பீன்ஸ் - தக்காளி சாலட்
    X

    சத்து நிறைந்த பீன்ஸ் - தக்காளி சாலட்

    தினமும் காலையில் சாலட் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பீன்ஸ், தக்காளி வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் - 1 கப்,
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    காய்ந்த பேசில் - அரை டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கு
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - கால் டீஸ்பூன்
    தக்காளி - 2
    வேர்க்கடலை - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீன்ஸை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    துண்டுகளாக நறுக்கிய பீன்ஸை 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அல்லது கொதிக்கும் நீரில் போட்டு வைக்கலாம். பீன்ஸ் நிறம் மாறக்கூடாது. 

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பீன்ஸ், பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில், காய்ந்த பேசில், உப்பு, [பாட்டி மசாலா] மிளகு தூள், வேர்க்கடலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக தக்காளி சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பீன்ஸ் - தக்காளி சாலட் ரெடி.
    Next Story
    ×