search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்
    X

    புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

    நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் இந்த முள்ளங்கி டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இந்த டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் ஸ்லைஸ் - 5,
    சிவப்பு முள்ளங்கித் துருவல் - அரை கப்,
    வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    * பிரட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும்.

    * தோசைக்கல்லைக் காயவைத்து மிதமான தீயில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, வெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * இந்தக் கலவையை டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது வைத்துப் பரிமாறவும்.

    * சத்தான முள்ளங்கி டோஸ்ட் ரெடி.'

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×