என் மலர்

  ஆரோக்கியம்

  சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி
  X

  சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த கம்பு உருண்டையை அனைவரும் சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  கம்பு - 1/2 கிலோ
  கருப்பட்டி - 1/2 கிலோ
  வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்.

  செய்முறை :

  * கம்பை நன்றாக இடித்துக்கொள்ளவும்.

  * வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.

  * கருப்பட்டியுடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

  * கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

  * கருப்பட்டிபாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், கருப்பட்டிபாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. கருப்பட்டிபாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.

  * சுவையான சத்தான கம்பு உருண்டை ரெடி.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×