என் மலர்

  ஆரோக்கியம்

  நோய் எதிர்ப்பு சக்தி தரும் திப்பிலி ரசம்
  X

  நோய் எதிர்ப்பு சக்தி தரும் திப்பிலி ரசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி. திப்பிலி கொண்டு தயாரிக்கப்படும் ரசம் உடலுக்கும் மிகவும் நல்லது.
  தேவையான பொருட்கள் : 

  அரிசி திப்பிலி - 10, 
  கண்டதிப்பிலி - சிறிதளவு, 
  மிளகு - 10, 
  காய்ந்த மிளகாய் - ஒன்று, 
  புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, 
  சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், 
  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
  உப்பு - தேவையான அளவு.
  கொத்தமல்லி - சிறிதளவு

  செய்முறை: 

  * புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

  *  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 

  * அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

  * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து  ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும். 

  குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×