search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    குறட்டை பிரச்சனையா? நிரந்தர தீர்வு இதோ...
    X

    குறட்டை பிரச்சனையா? நிரந்தர தீர்வு இதோ...

    • குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.
    • சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

    குறட்டை, தூக்கக்கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இது தூக்க சுழற்சியையும் தொந்தரவு செய்யக்கூடியது. தூங்கும்போது, கழுத்து தசைகள் இலகுவாகும். அப்போது மூக்கு, தொண்டை பாதை குறுகியதாக மாறும். அதனால் காற்று நுரையீரலுக்குள் செல்வது சிரமமாகும். மேலும் திசுக்கள் அதிர்வுக்குள்ளாகும். குறட்டை விடும்போதுதான் இந்த பிரச்சினைகள் உண்டாகும். குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.

    சோயா: குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை உட்கொள்வது நல்லதல்ல. பசுவின் பால், பாலாடைக்கட்டி போன்றவை கபத்தை அதிகரிக்கும். இதனால் இரவில் குறட்டை பிரச்சினையும் அதிகமாகும். பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பால் உள்ளிட்ட பிற சோயா பொருட்களை உட்கொள்ளலாம். அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குறட்டையையும் குறைக்கும்.

    தண்ணீர்: தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது சளியை போக்கும். மார்புக்கும் இதமளிக்கும். சளி உருவாகுவதை தடுக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பருகினால் மார்புக்கு இதமளித்து குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவும்.

    தூக்கம்: போதுமான நேரம் தூங்குவதும் குறட்டையை தவிர்க்க உதவும். உடலும், உள்ளமும் உற்சாகமாக இல்லாவிட்டால் தொண்டை, நாக்கு தசைகள் இறுக்கமடைந்துவிடக்கூடும். அதனாலும் குறட்டை உருவாகிவிடும். தினமும் 7 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதில் சிக்கல் இருந்தால் குறட்டை பிரச்சினையும் தலைதூக்கிவிடும்.

    பாதாம்: மெலடோனின் நிறைந்த உணவுகள் குறட்டையை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மெலடோனின் என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோனாகும். பாதாம், கிவி, செர்ரி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் இந்த ஹார்மோன் நிறைந்திருக்கிறது. அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது குறட்டையில் இருந்து விடுபட உதவும்.

    நாசி ஸ்பிரே: நாசி ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதும் குறட்டையை கட்டுப்படுத்த உதவும். தூங்குவதற்கு முன்பு தலையை நன்றாக சாய்த்துக்கொண்டு மூக்கு வழியாக ஸ்பிரேயை தெளிக்கலாம்.

    பூண்டு: சூடான உணவுகள் குறட்டையை குறைக்க உதவும். பூண்டுவை வறுத்து சூடாக சாப்பிடுவது சளியை போக்கவும், அது உருவாகுவதைத் தடுக்கவும் உதவும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பூண்டின் ருசி நாக்குக்கும் விருந்து படைக்கும். அதன் வாச னையும் நிறைய பேருக்கு பிடிக்கும்.

    சாமந்தி டீ: சாமந்தி டீயில் ஆல்பா பிசபோலோல் மற்றும் டைமசோலின் ஆகிய அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இவை குறட் டையை குறைக்க உதவும். காலையிலோ அல்லது மாலையிலோ சூடாக சாமந்தி டீ பருகலாம்.

    மிளகுக்கீரை எண்ணெய்: இந்த எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நாசியின் உள் புறத்தில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும். நாசி அடைப்பை திறந்து குறட்டையை நிறுத்த உதவும்.

    இஞ்சி: இஞ்சி மற்றும் தேன் கலந்த டீ பல நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. காலையிலும், இரவிலும் இந்த டீயை பருகுவது குறட்டை பிரச்சினை குறைவதற்கு உதவும். இரவில் நல்ல தூக்கமும் வரும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தொண்டைக்கு இதமளிக்கும். குறட்டையையும் போக்கும்.

    நெய்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நெய் குறட்டையை கட்டுப்படுத்தவும் உதவும். அதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    மேலும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

    * உடல் பருமன் கொண்டிருந்தால் அதனை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    * புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் அதனையும் கைவிட வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாக்கு, தொண்டைகளுக்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதும் பலன் தரும்.

    * இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் நீராவி பிடிப்பதும் நல்லது. பயன்படுத்தும் தலையணையை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.

    Next Story
    ×