search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுகுவலி
    X
    முதுகுவலி

    முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

    ‘முதுகு வலி’ என்பது அன்றாட வாழ்வில் நம் வீட்டிலோ, சுற்றத்திலோ சாதாரணமாய் சொல்லப்படும், கேட்கப்படும் வார்த்தைதான். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘முதுகு வலி’ என்பது அன்றாட வாழ்வில் நம் வீட்டிலோ, சுற்றத்திலோ சாதாரணமாய் சொல்லப்படும், கேட்கப்படும் வார்த்தைதான். வலுவற்ற தசை, பிடிப்பு காரணமாக ஏற்படும் இந்த சாதாரண வலி தைலம் தடவுவதன் மூலமும், யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மூலமும், சிறிது ஓய்வின் மூலமும் போய் விடுகின்றது.

    யோகா பயிற்சி

    * தசை, தசை நாருக்கு பாதிப்பு
    * தண்டுவட எலும்புகள் இடையே உள்ள பகுதியில் பாதிப்பு
    * மூட்டு வலி
    * தண்டுவட வளைவு

    இவற்றின் காரணமாகவும் முதுகு வலி ஏற்படுகின்றது.

    முதுகு வலியோடு

    * சிறுநீர், கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறிக் கொண்டிருந்தாலோ
    * இரவு தூக்கத்தில் அல்லது படுக்கும்போது ஏற்பட்டாலோ
    * இங்குதான் வலி என குறிப்பிட்டு சொல்ல முடியாமல் இருந்தாலோ (இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்)
    * காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ஆகியும் வலி அதிகமாக இருந்தால்
    * உயரம் குறைந்தால்
    * வலியுடன் உடலில் வேர்வையும் இருந்தால்
    * வலி வயிறு, முதுகு பின்புறம், கீழ் வயிறு என்று இருந்தால்

    மேற்கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் உடனடியாக மருத்துவர் ஆலோசனையும், சிகிச்சையும் தேவைப்படுகின்றது. ஆக 1 மற்றும் 2 விதமான பாதிப்புக்கும் இந்த காரணிகள் நம்மை கொண்டு செல்லும்.

    Next Story
    ×