search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தியான முத்திரை
    X
    தியான முத்திரை

    மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை

    2020 புது வருடத்தில் மன அமைதியுடன் மன அழுத்தம் இல்லாமல் வாழ இதோ ஒரு எளிய முத்திரை - “தியான முத்திரை”.
    எல்லா உடல், மன நோய்களுக்கு காரணமாக அமைவது மன அழுத்தம், மனக்கவலைதான். மன அழுத்தத்தினால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல் பலவித நோய்கள் வருகின்றது. மனதில் அழுத்தம் இல்லாமல் கவலையில்லாமல் இருந்தால் தான் நமது உடலில் உள்ள நானமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.

    மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும். பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் முத்திரைத்தான் தியான முத்திரையாகும்.

    இன்றைய பரப்பரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்

    தியான முத்திரை எப்படி செய்வது

    விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம். மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும். பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க). பின் மெதுவாக கண்களை திறக்கவும்.

    காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யவும்.

    நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை, பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது. அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது. உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.

    தியான முத்திரையின் இதர பலன்கள்

    மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாது காக்கப்படும், இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது, சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், தன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

    இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை இந்த 2020-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற யோகாசனத்தையும் பயிலுங்கள். 
    Next Story
    ×