search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து
    X
    டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து

    டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து

    டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.
    இப்போதையை தலைமுறையினர் குழந்தைகள் அசுத்தம் செய்துவிடுவார்களோ எனும் பயத்தால் குழந்தையை தூக்குவதே கிடையாது. இதை தவிர்க்க அவர்களுக்கு கிடைத்த புதிய வழி டயபர்களை உபயோகிப்பது. இவற்றை அகற்றி அப்புறபடுத்துவது எளிதான ஒன்று என கருதுவதால் இவற்றை உபயோகிறார்கள். ஆனால் டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.  

    1 ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    2 பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.

    3 டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

    4 குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபயோகித்து தூக்கி எறிய கூடிய டயபர்கள், சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.

    5 குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    6 தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

    7 உபயோகித்து தூக்கி ஏறிய கூடிய டயபர்களில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால், இவை எளிதில் மாக்குவதில்லை. இவை சுற்று சூழலை பாதிக்க கூடியவை. இதனால் பெரியவர்களையும் இவை பாதிக்கின்றன.

    8 இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இவை விலை அதிகமாக இருந்தாலும், விளம்பரங்களால் பெற்றோர்கள் ஈர்க்கப்பட்டு எளிதில் அப்புற படுத்திவிடலாம் என உபயோகிக்க துவங்கி விடுகிறார்கள். இதற்கென அவர்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு குழந்தைகளுக்கு வாங்கி உபயோகிக்கிறார்கள். இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு துணிகளை பயன்படுத்துவது சிறந்தது. உங்களுக்கு வேலை அதிகம் என்று நினைத்தால், இவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.  

    Next Story
    ×