search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேரட் சாலட் செய்வது எப்படி
    X

    கேரட் சாலட் செய்வது எப்படி

    சுவையான சத்தான கேரட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 3 நடுத்தர அளவு
    வெங்காயம் - சிறியது 1
    பச்சை மிளகாய் - 1
    எலுமிச்சை சாறு -  1 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப


    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை ஆகியவற்றை போட்டு அத்துடன் சிறிதளவு உப்பையும் எலுமிச்ச சாறையும் சேர்த்து நன்று கிளறி பரிமாறவும்.

    * சுவையான சத்தான கேரட் சாலட் ரெடி.

    * விருப்பப்பட்டால் ப.மிளகாவிற்கு பதிலாக மிளகு தூளை பயன்படுத்தலாம்.

    -  உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×