search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உப்பிலியபுரம் கோவில்களில் மாசிமக திருவிழா
    X
    உப்பிலியபுரம் கோவில்களில் மாசிமக திருவிழா

    உப்பிலியபுரம் கோவில்களில் மாசிமக திருவிழா

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாசிபெரியண்ணசாமி கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது.
    உப்பிலியபுரம் மகாமாரியம்மன் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. கோவில் வளாகத்திலுள்ள மகாமாரியம்மன், செல்லாயிஅம்மன், காரடியான் மூலவர்களுக்கு மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பால், தயிர், இளநீர் முதலான அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவ மூர்த்திகள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி மகாமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    இதேபோல, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாசிபெரியண்ணசாமி கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி மாசிபெரியண்ணசாமி, காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி காரடியான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் இந்தகோவிலில் நள்ளிரவில் நடைபெறும் எரிகாவு பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
    Next Story
    ×