search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமியும் அம்பாளும் வீதி வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தைத்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைத்திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு விநாயகர், பூத நாதர், சாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.30 க்குள் கொடியேற்றம் நடந்தது.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம், கோவில் ஸ்ரீகாரியம் சண்முகம் பிள்ளை, பா.ஜனதா நிர்வாகிகள் விஜய மணியன், நாகராஜன், ரெங்கநாதன் மற்றும் பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமியும் அம்பாளும் வீதி வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சப்தவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 18-ந் தேதி இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, பூதப்பாண்டி பூத லிங்கேஸ்வரர் பக்தர்கள் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×