search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
    X
    பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

    தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

    தர்மஷம்வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றன. ரவி குருக்கள் தலைமையில் பைரவருக்கு மகா தீபாராதனை பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சமூக இடைவெளியோடு பக்தர்கள் கலந்து கொண்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பைரவரை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×