search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில்
    X
    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில்

    செட்டியாபத்து, தேரிக்குடியிருப்பில் கோவிலுக்கு வெளியே நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை என்பதால், கொண்டு வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு வெளியே படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
    கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாகனங்களில் நேற்று வந்தனர்.

    கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை என்பதால், கொண்டு வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு வெளியே படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
    Next Story
    ×