search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரத்தில் சிறப்பு தன்வந்திரி யாகம்
    X
    ராமேசுவரத்தில் சிறப்பு தன்வந்திரி யாகம்

    ராமேசுவரத்தில் சிறப்பு தன்வந்திரி யாகம்

    ராமேசுவரத்தில் சிறப்பு தன்வந்திரி யாக பூஜை நடைபெற்றது.ராமேசுவரத்தில் உள்ள 28 வீடுகளில் இந்த சிறப்பு தன்வந்திரி யாக பூஜை நடைபெற்றது.
    ராமேசுவரத்தில் நேற்று பா.ஜனதா கட்சி மற்றும் பிராமணர்கள் சங்கத்தின் சார்பிலும் கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் பூரண குணமடைய வேண்டியும் நேற்று சிறப்பு தன்வந்திரி யாக பூஜை நடைபெற்றது.

     கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ராமேசுவரத்தில் உள்ள 28 வீடுகளில் இந்த சிறப்பு தன்வந்திரி யாக பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெற்ற இந்த தன்வந்திரி யாக பூஜையை 5 வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர்.

    கோவிலின் மேற்கு ரத வீதி அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்து நடைபெற்ற தன்வந்திரி யாக பூஜையில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், சங்கரமடத்தின் நிர்வாகிகள் சங்கரவாத்தியார், சுந்தரவாத்தியார் உள்பட கலந்து கொண்டனர்.
    Next Story
    ×