search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா
    X
    ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

    ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

    ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. மேளதாளம் முழங்க நையாண்டி ஆட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய, விடிய பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
    ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஓசூரில் பல்லக்கு மற்றும் கரக உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற பல்லக்கு விழாவில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் விநாயகர், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர், முருகன், மலை மாதேஸ்வர சாமி, வெங்கடேஸ்வர சாமி, ஆஞ்சநேயர், கிருஷ்ணர், வேணுகோபாலசாமி, தர்மராஜா சாமி, சனீஸ்வரர், சாய்பாபா, கோட்டை மாரியம்மன், எல்லம்மன், துர்க்கை, காளிகாம்பாள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சாமிகளை வைத்து நாதஸ்வரம், மேளதாளம் முழங்க நையாண்டி ஆட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய, விடிய பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

    மேலும், ஓசூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தர்மராஜர் பூ கரக உற்சவமும் நடைபெற்றது. கரகம் வந்த வழியில் பக்தர்கள் கோலமிட்டு கரகத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக விழா கமிட்டி சார்பில், ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வரம் மற்றும் இசைக்கச்சேரியும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×