search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
    X
    திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

    திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

    திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்க காப்புக்கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட திருவிழா கடந்த 12-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து குண்டம் இறங்க காப்புக்கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செங்கோடு மலையடிக்குட்டையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் திருவிளக்கு பூஜை, அக்னி கரகம், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா குண்ட திருவிழா அடுத்த வாரம் புதன்கிழமை காலை நடைபெற உள்ளது.
    Next Story
    ×