search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாவை பாடல்கள் கொண்ட பட்டுப்புடவையில் காட்சி தந்த ஆண்டாள்
    X
    திருப்பாவை பாடல்கள் கொண்ட பட்டுப்புடவையில் காட்சி தந்த ஆண்டாள்

    திருப்பாவை பாடல்கள் கொண்ட பட்டுப்புடவையில் காட்சி தந்த ஆண்டாள்

    மார்கழி மாத பிறப்பையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருப்பாவை பாடல்கள் கொண்ட பட்டுப்புடவை அலங்காரத்தில் ஆண்டாள் காட்சி தந்தார்.
    12 மாதங்களில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. ஆண்டாள் அரங்கனை கைப்பிடிக்க நோன்பு இருந்த மாதம்தான் மார்கழி மாதம்.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஆண்டாள் மற்றும் ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதையடுத்து திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரமாகி ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சி தந்தனர்.

    இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×