search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவிலுக்குள் பிரகார வலம் வரும் போது ஓடாதீர்கள்
    X
    கோவிலுக்குள் பிரகார வலம் வரும் போது ஓடாதீர்கள்

    கோவிலுக்குள் பிரகார வலம் வரும் போது ஓடாதீர்கள்

    கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு. இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.
    கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு.

    சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோவிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.

    ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோவிலை வலம் வரக்கூடாது.

    குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.
    Next Story
    ×