search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள் ஏமாற்றம்

    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். ஆனால் பரிகாரம் செய்ய அனுமதி இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. அத்துடன் திருமணமாகாதவர்களுக்கு இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இக்கோவிலுக்கு, ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் கல்வாழை பரிகாரம் செய்வதற்கும், இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம் பல தளர்வுகள் உடன் கோவிலை திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக பல மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர்.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நீலிவனநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் கல்வாழைக்கு பரிகாரம் செய்யவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பரிகாரம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சுவாமியை மட்டும் வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்திருந்தனர். அவர்கள் முடிக் காணிக்கை செலுத்தியும், கோவிலின் முன்புறம் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.
    Next Story
    ×