search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    தோவாளை கிருஷ்ணசாமி கோவில் உறியடி திருவிழா ரத்து

    தோவாளையில் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி கோவிலில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
    தோவாளையில் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ணஜெயந்தியையொட்டி 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் உறியடி விழா சிறப்பு பெற்றதாகும். இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணஜெயந்தி அன்று திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால், நேற்று நடக்க இருந்த திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால், தினமும் வழக்கமாக கோவிலில் நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி நடந்தது.
    Next Story
    ×