search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை ரத்து

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நடைபெற வேண்டிய 1,008 திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த நாளில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளுவார். பின்னர் காலையில் இருந்து இரவு 7 மணி வரை இதே மண்டபத்தில் தங்கி இருந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    இதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வருகிற 12-ந்தேதி நடைபெற இருந்த ஆடி கார்த்திகை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேசமயம் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் பக்தர்கள் அனுமதி இன்றி உள் திருவிழாவாக ஆடிகார்த்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதே போல இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜைகள் கோலாகலமாக நடைபெறும். வருகிற 14-ந்தேதி நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×