search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவதிகை வீட்டானேசுவர்
    X
    திருவதிகை வீட்டானேசுவர்

    தலை குனிந்து வந்தால் தலை நிமிர்ந்து செல்லலாம்

    திருவதிகை தலத்தில் ஆணவக்காரர்களுக்கு இடம் இல்லை என்பது வேதவாக்காக உள்ளது. பக்தர்கள் தங்கள் மனதில் வேறு எந்த ஆணவ சிந்தனையையும் வளர விடுவதில்லை.
    மனிதனுக்கு ‘நான்’ என்ற அகந்தையும் ‘என்னால் மட்டும் முடியும்’ என்ற ஆணவமும் இருக்கவே கூடாது. இப்படி தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் பின்னாளில் அதற்காக நிச்சயம் வருத்தப்படுவார்கள். இந்த உண்மை நன்கு தெரிந்து இருந்தும் சிலர் ஆணவத்தை கைவிடுவதில்லை. இறைவனை அணுகும்போதும் கூட பந்தா செய்வார்கள். அவர்களிடம் ஒரு மிடுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    இத்கைய ஆணவம் கொண்டவர்களை திருவதிகை ஈசன் தன் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலம் கொண்டவர்கள் இத்தலத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்பது ஐதீகம்.

    மூன்று அசுரர்களை அழித்து இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியதால் திருவதிகை தலத்தில் ஆணவக்காரர்களுக்கு இடம் இல்லை என்பது வேதவாக்காக உள்ளது. இதன் காரணமாக இத்தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தங்கள் முழு மனதையும் வீராட்டனேசுவரிடம் சரண் அடையச் செய்து ஒப்படைத்து விடுகிறார்கள். தங்கள் மனதில் வேறு எந்த ஆணவ சிந்தனையையும் வளர விடுவதில்லை.

    குறிப்பாக கருவறைக்குள் வரும்போது பணிவாக இருக்கிறார் கள். ஈசனுக்கு கொடுக்கும் மலர்கள், நைவேத்தியங்களை கூட பவ்வியமாக கொடுக்கிறார்கள். அதுபோல மூலவருக்கு தீபாராதனை காட்டப்படும்போது தலை குனிந்து நிற்கிறார்கள். தீபத்தை கண்களில் ஒற்றிக் கொள்ளும் போதும் பயபக்தியுடன் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல திருநீறு பூசும்போது தலையை நிமிர்த்துவது இல்லை. தலையை குனிந்து கொண்டே நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
    தலை குனிந்து வருபவர்களுக்கு ஈசனின் அருள் பார்வை நிச்சயம் கிடைக்கும். பலன்கள் மடை திறந்த வெள்ளம்போல வந்து விடும். இதனால் ‘தலை குனிந்து வந்தவர்கள் தலை நிமிர்ந்து செல்வார்கள்’.

    எனவே வீராட்டனேசுவரரை வழிபடும்போது பணிவு தேவை. மறந்தும் நெஞ்சை நிமிர்த்தி விடாதீர்கள். இந்த ஈசனுக்கு ருத்ர அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இது தவிர விபூதி, சந்தனம், அபிஷேகம் செய்தும் வழிபடலாம். இந்த வழிபாடு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத் தையும் நமக்குத் தரும்.
    Next Story
    ×